azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 08 Sep 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 08 Sep 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Winning perfect security requires following the path of full devotion and dedicating oneself to the Lord. It cannot be obtained by other means. The path of spiritual wisdom (jnana) is possible only for one in a million; it is beyond the reach of all. Is it possible to negate the body and the objective world, so patent to the senses, by repeating “Not this, not this (neti, neti)”? Unless this is possible, how can the “Not this, not this” argument be applied? Under present conditions, the path of wisdom is indeed very difficult. The path of selfless activity is also not quite so feasible. It is also full of difficulties. To work in the proper spirit, love and devotion are essential for success. The path of yoga or communion also bristles with obstacles. Thus, the path of devotion is the smoothest, the most conducive to success, and the most bliss-yielding!(Prasanthi Vahini,Ch 9)
THE PATH OF DEVOTION AND DEDICATION IS EASIEST FOR MOST.
IT IS ATTAINABLE BY LOVE, FOR LOVE LEADS YOU QUICKLY TO THE GOAL. - BABA
பூரண பாதுகாப்பை வெல்வதற்கு முழுமையான பக்தியின் பாதையைப் பின்பற்றி இறைவனுக்கு தன்னை அர்ப்பணிக்க வேண்டும். பிற வழிகளில் இதைப் பெற முடியாது. ஞான மார்க்கம் என்பது கோடியில் ஒருவருக்கே சாத்தியமாகும்; அது எல்லோருக்கும் எட்டாதது. புலன்களுக்கு இவ்வளவு வெளிப்படையாக புலப்படும் உடல் மற்றும் பொருட்களாலான உலகை, “இது அல்ல, இது அல்ல (நேதி, நேதி)" என்று திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் மறுக்க முடியுமா? இது முடியவில்லை என்றால், “இது அல்ல, இது அல்ல” என்ற வாதத்தை எவ்வாறு பயன்படுத்த முடியும்? தற்போதைய சூழ்நிலையில் ஞானமார்க்கம் உண்மையிலேயே மிகவும் கடினமானது. தன்னலமற்ற கர்மாவின் பாதையும் அவ்வளவு சாத்தியமானதல்ல. அதுவும் கூட கஷ்டங்கள் நிறைந்ததே. முறையான உணர்வுடன் செயலாற்றுவதற்கு, ப்ரேமையும், பக்தியும் வெற்றிக்கு இன்றியமையாதவை. யோகத்தின் பாதையும் கூட தடைகள் நிறைந்ததே. எனவே, பக்தியின் பாதையே மிகவும் இதமானதும், வெற்றிக்கு மிகவும் உகந்ததும், அளவற்ற ஆனந்தத்தை அளிப்பதும் ஆகும்! (பிரசாந்தி வாஹினி, அத்தியாயம்-9)
பெரும்பாலானவர்களுக்கு பக்தி மற்றும் அர்ப்பணிப்பின் பாதை மிகவும் எளிதானதாகும். அது ப்ரேமையின் மூலம் அடையவல்லது, ஏனெனில் ப்ரேமை உங்களை விரைவாக இலக்கிற்கு இட்டுச் செல்கிறது. - பாபா