azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 05 Sep 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 05 Sep 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Teachers’ virtues are reflected in their pupils; their faith inspires the young. Whether people waste their lives and ruin the lives of others by their barren pursuits or whether people lead happy lives promoting the happiness of others - the answer lies in the hands of teachers. A life without character is as barren as a temple without a lamp, a coin that is counterfeit, and a kite that has a broken string. A teacher who instructs pupils with his eye fixed on his salary, and a pupil who learns with his eye fixed on a job are both missing their vocation. The teacher has to help the pupil unfold and manifest the skills and qualities inherent in him and encourage him to rise to the fullest height he is capable of. The Divine is the core in both teacher and pupil. The educational process is to increase awareness of this truth and increase the utilisation of this latent power. ( Divine Discourse May 22,1982)
TEACHERS ARE THE PATH-FINDERS OF NATIONS. THEY PREPARE THE ROYAL ROAD TO A BRIGHT FUTURE. - BABA
ஆசிரியர்களின் நற்பண்புகள் அவர்களுடைய மாணவர்களிடம் பிரதிபலிக்கின்றன; அவர்களுடைய நம்பிக்கை இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. மனிதர்கள் தங்களுடைய பயனற்ற தேடல்களின் மூலம் தங்களுடைய வாழ்க்கையை வீணடிப்பதோடு மற்றவர்களின் வாழ்க்கைகளைப் பாழடிக்கிறார்களா அல்லது பிறரின் சந்தோஷத்தைப் பேணுவதன் மூலம் சந்தோஷமான வாழ்க்கை நடத்துகிறார்களா - இதற்கான பதில் ஆசிரியர்களின் கைகளில்தான் இருக்கிறது. நற்குண சீலமற்ற ஒரு வாழ்க்கை, தீபமில்லாத ஒரு கோவில், ஒரு கள்ள நாணயம் மற்றும் கயிறு அறுந்த ஒரு பட்டம் போன்று பயனற்றது. தன் சம்பளத்திலேயே குறியாக இருந்து கற்பிக்கும் ஒரு ஆசிரியர், நல்ல வேலை பெறவேண்டும் என்பதிலேயே குறியாக இருந்து கற்றுக்கொள்ளும் ஒரு மாணவன் ஆகிய இருவருமே தத்தம் பணியில் தவறுபவர்களே. மாணவனிடம் பொதிந்திருக்கும் திறன்கள் மற்றும் குணங்கள் மலர்ந்து வெளிப்படுவதற்கு ஆசிரியர் உதவி செய்து, அவனால் முடிந்த அளவு முழுமையாக உயர்வதற்கு அவனுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். ஆசிரியர், மாணவன் ஆகிய இருவருள்ளும் தெய்வீகமே கருவாய் விளங்குகிறது. இந்த சத்தியத்தைப் பற்றிய விழிப்புணர்வைப் பெருக்கி, இந்த உள்ளுறையும் சக்தியின் பயன்பாட்டை அதிகமாக்கவே கல்விமுறை இருக்கிறது. (தெய்வீக அருளுரை, மே 22, 1982)
ஆசிரியர்களே தேசங்களின் வழிகாட்டிகள். அவர்களே ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கான ராஜபாட்டையை தயார் செய்கிறார்கள். - பாபா