azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 31 Aug 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 31 Aug 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

When you fill your hearts with love, you have no ill-will towards anyone. Cultivate the faith that the Divine is in everyone. Surrender to the Divine in a spirit of dedication. The symbolic meaning in the relations between Krishna and the Gopikas is this: The heart is the Brindavan (in each person). One's thoughts are like the Gopikas. The Atma is Krishna. Bliss is the sport of Krishna. Everyone must convert his heart into a Brindavan and consider the indwelling Atma as Krishna. Every action should be regarded as a Leela of Krishna. Gokulashtami is celebrated by offering to Krishna Paramannam (rice cooked with jaggery). The real meaning of Paramannam is Annam (food) relating to Param (Supreme). Paramannam is sweet. Your love must be sweet. What you offer to God must be your sweet love. Your love must be all-embracing. This is the foremost message of the Krishnavatar.( Divine Discourse Sep 03,1988)
THERE’S NOTHING THAT CANNOT BE ACCOMPLISHED THROUGH LOVE.
LOVE IS GOD. GOD IS LOVE. LIVE IN LOVE. - BABA
உங்கள் இதயங்களை நீங்கள் ப்ரேமையால் நிரப்பிவிட்டால், உங்களுக்கு எவர் மீதும் த்வேஷம் இருக்காது. ஒவ்வொருவர் உள்ளும் இறைவன் உறைகிறான் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். அர்ப்பணிப்பு உணர்வுடன் இறைவனிடம் சரணடையுங்கள். கிருஷ்ணருக்கும், கோபிகைகளுக்கும் இடையே இருந்த உறவுகள் குறிப்பிடும் உட்பொருள் இதுதான்: ஒவ்வொருவரின் இதயமே பிருந்தாவனம். ஒருவரின் சிந்தனைகள் கோபிகைகளைப் போன்றவை. ஆத்மாவே கிருஷ்ணர். ஆனந்தமே கிருஷ்ணரின் லீலை. ஒவ்வொருவரும் தங்கள் இதயத்தை ஒரு பிருந்தாவனமாக மாற்றிக்கொண்டு, உள்ளுறையும் ஆத்மாவை கிருஷ்ணராகக் கருத வேண்டும். ஒவ்வொரு செயலையும் கிருஷ்ணரின் லீலையாகக் கருத வேண்டும். கோகுலாஷ்டமி பண்டிகையன்று கிருஷ்ணருக்கு பரமான்னம் (வெல்லத்துடன் சமைக்கப்படும் சாதம்) படைத்து கொண்டாடப்படுகிறது. பரமான்னத்தின் உண்மையான பொருள் பரம்பொருளுக்கு (பரம்) சம்பந்தப்பட்ட அன்னம் (உணவு) என்பதாகும். பரமான்னம் இனிமையானது. உங்களது ப்ரேமையும் இனிமையானதாக இருக்கவேண்டும். நீங்கள் இறைவனுக்குப் படைப்பது உங்களது இனிமையான ப்ரேமையாக இருக்கவேண்டும். உங்களுடைய ப்ரேமை, அனைத்தையும் அரவணைத்துச் செல்வதாக இருக்க வேண்டும். இதுவே கிருஷ்ணாவதாரத்தின் மிக முக்கியமான உபதேசமாகும். (தெய்வீக அருளுரை, செப்டம்பர் 03, 1988)
ப்ரேமையின் மூலம் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை. ப்ரேமையே இறைவன். இறைவனே ப்ரேமை. ப்ரேமையில் வாழுங்கள். - பாபா