azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 28 Aug 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 28 Aug 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Some people may have some doubts related to prayer. Of what avail is prayer? Will the Lord gratify all that we ask for in our prayers? He gives us only what He feels we need or deserve, is it not? Will the Lord like to give us all that we ask for in our prayers to Him? Of course, all these doubts can be resolved. If the devotee has dedicated everything — body, mind, and existence — to the Lord, He will Himself look after everything, for He will always be with the devotee. Under such conditions, there is no need for prayer. But have you so dedicated yourself and surrendered everything to the Lord? No. When losses occur, calamities come, or plans go awry, the devotee blames the Lord. Some, on the other hand, pray to Him to save them. If you avoid both of these, as well as reliance on others by placing complete faith on the Lord at all times, why should He deny you His grace? Why should He desist from helping you?( Ch.7,Prashanthi Vahini)
THROUGH PRAYER AND CONTEMPLATION ON GOD,
YOU SHOULD TRY TO CONTROL THE EVIL QUALITIES IN YOU. - BABA
சிலருக்கு பிரார்த்தனையைப் பற்றி சில சந்தேகங்கள் இருக்கக்கூடும். பிரார்த்தனையால் என்ன பயன்? நம்முடைய பிரார்த்தனையில் நாம் வேண்டுவதை எல்லாம் இறைவன் நிறைவேற்றிவிடுவானா? நமக்கு என்ன தேவை அல்லது நாம் எதற்குத் தகுதியானவர் என்று அவன் கருதுவதை மட்டுமே அவன் அளிக்கிறான், இல்லையா? நம்முடைய பிரார்த்தனையில் நாம் கேட்பதை எல்லாம் நமக்கு அளிக்க இறைவன் விரும்புவானா? இந்த சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்து வைக்க முடியும். பக்தன் தன்னுடைய எல்லாவற்றையும் - உடல், மனம் மற்றும் வாழ்க்கையை இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டால், இறைவனே அனைத்தையும் கவனித்துக் கொள்வான், ஏனெனில் அவன் பக்தனுடனேயே எப்போதும் இருக்கிறான். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில், பிரார்த்தனைக்கே அவசியமில்லை. ஆனால், நீங்கள் உங்களை இவ்வாறு அர்ப்பணித்துக் கொண்டு, எல்லாவற்றையும் இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டீர்களா? இல்லையே. இழப்புகள் ஏற்படும்போது, பேரிடர்கள் வரும்போது, அல்லது திட்டங்கள் தடுமாறும்போது, பக்தன் இறைவனைக் குற்றம் சாட்டுகிறான். மற்றொரு பக்கம், சிலர், அவர்களைக் காப்பாற்றுமாறு இறைவனிடம் பிரார்த்திக்கிறார்கள். எல்லாக் காலங்களிலும் இறைவன் மீது பரிபூரண நம்பிக்கை வைப்பதன் மூலம், இந்த இரண்டையும், மேலும் பிறரின் மீது சார்ந்திருப்பதையும் நீங்கள் தவிர்த்துவிட்டீர்களானால், அவன் தனது அருளை உங்களுக்கு ஏன் மறுக்கப் போகிறான்? அவன் உங்களுக்கு உதவுவதை ஏன் தவிர்க்க வேண்டும்? (பிரசாந்தி வாஹினி, அத்தியாயம்-7)
இறைவன் மீதான பிரார்த்தனை மற்றும் தியானத்தின் மூலம், உங்களுள் உள்ள தீய குணங்களைக் கட்டுப்படுத்த நீங்கள் முயல வேண்டும். - பாபா