azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 27 Aug 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 27 Aug 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

The real sacrifice involves two things: First, to realise the cause of our bondage in this life, and second, to sever this bondage. Man mistakenly thinks that wealth and family are his bondages, and that by severing connections with them he will be able to sacrifice everything and become eligible to attain moksha. These are not real bondages; real bondage is his ignorance in identifying himself with his body! He who cuts off this bondage as Bali did, will attain moksha. To cut bondage, purification of the heart is necessary. Purification of the body with soap and water, and applying perfume doesn’t result in the purification of the mind. In Kaliyuga, namasmarana (constantly remembering God) is the easiest way to purify one's mind; surrendering to God with a pure mind is the surest way to attain moksha! ( Divine Discourse Sep 4,1979)
DESTROY YOUR EGO, YOU WILL HAVE NO NEED TO SEEK LIBERATION; YOU WILL BE LIBERATED! – BABA
உண்மையான தியாகம் இரண்டு விஷயங்களை உள்ளடக்கியது: முதலாவது, இந்த வாழ்க்கையில் நமக்கு உள்ள பந்தத்தின் காரணத்தை உணருவது; இரண்டாவது, அந்தப் பந்தத்தைத் துண்டிப்பது. மனிதன், செல்வமும் குடும்பமும் அவனது பந்தங்கள் என்றும், அவற்றுடன் உள்ள தொடர்புகளைத் துண்டித்துவிடுவதன் மூலம் அவன் அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு, மோக்ஷத்தை அடைவதற்கான தகுதியைப் பெற்றுவிடலாம் என்றும் தவறாக எண்ணுகிறான். இவை எல்லாம் உண்மையான பந்தங்கள் அல்ல; தன்னை தனது உடலுடன் இனம் கண்டுகொள்ளும் அவனது அறியாமையே உண்மையான பந்தமாகும்! பலிச்சக்ரவர்த்தி செய்ததைப் போல இந்த பந்தத்தைத் துண்டித்துக் கொள்பவரே மோக்ஷத்தை அடைவார். பந்தத்தைத் துண்டிப்பதற்கு இதயத் தூய்மை அவசியம். சோப்பாலும், நீராலும் உடலைச் சுத்தப்படுத்திக்கொண்டு வாசனைப் பொருட்களை பூசிக்கொள்வதால் மனம் தூய்மை அடைவதில்லை. கலியுகத்தில் இறைநாமஸ்மரணையே ஒருவரது மனதை தூய்மைப்படுத்துவதற்கான சுலபமான வழியாகும்; பரிசுத்தமான மனதுடன் இறைவனை சரணாகதி அடைவதே, மோக்ஷத்தை அடைவதற்கான நிச்சயமான வழியாகும்! (தெய்வீக அருளுரை, செப்டம்பர் 4, 1979)
நீங்கள் முக்தியை நாடவேண்டிய அவசியமில்லை; உங்களுடைய அகந்தையை அழித்து விடுங்கள், நீங்கள் முக்தி அடைந்துவிடுவீர்கள்! - பாபா