azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 24 Aug 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 24 Aug 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

In our daily life we leave ample room for the cultivation of undesirable traits such as greediness, selfishness and egoism, which in present-day mankind are reaching gigantic proportions. It is precisely due to this kind of situation that the world periodically gets plunged into wars. Bali's life message is that these traits in man should be eliminated at all costs, thus rendering the heart pure for the Lord to reside in it. Another important aspect of Bali's life is his demonstration of the fact that the quality of Tyaga (selfless sacrifice) should be an integral part of one's karma (actions). All beings perform actions, but only man, if he so desires, can act making sacrifice an integral component of his actions. Again, the existence of this trait in man is possible because of his ability to think and reflect. Unfortunately, man uses these God-given faculties to enunciate theories and to preach, but never to practice what is preached.(Divine Discourse Sep 4,1979)
LEARN THE SUPREME VALUE OF SACRIFICE FROM YOUR OWN PARENTS WHO SACRIFICE SO MUCH FOR THE SAKE OF THEIR CHILDREN. YOUR DUTY IS TO KEEP YOUR PARENTS HAPPY AS LONG AS THEY LIVE. - BABA
நமது அன்றாட வாழ்வில், பேராசை, சுயநலம் மற்றும் அகங்காரம் போன்ற விரும்பத்தகாத பண்புகளை வளர்ப்பதற்கு நாம் அதிகமான இடத்தைக் கொடுத்து விட்டோம்; இன்றைய மனிதகுலத்தில் இவை பிரம்மாண்டமான அளவை எட்டிவிட்டன. குறிப்பாக இப்படிப்பட்ட நிலைமையினால்தான் உலகம் அடிக்கடி யுத்தங்களில் ஆழ்ந்துவிடுகிறது. பலிச்சக்ரவர்த்தியின் வாழ்க்கை தரும் செய்தி யாதெனில், மனிதனில் உள்ள இப்படிப்பட்ட இயல்புகளை எப்பாடுபட்டேனும் நீக்கி, இறைவன் உறைவதற்கு ஏற்ப இதயம் பரிசுத்தமாக்கப்பட வேண்டும் என்பதாகும். பலிச்சக்ரவர்த்தி வாழ்க்கையின் மற்றுமொரு முக்கியமான அம்சம் - தியாகப்பண்பு (தன்னலமற்ற தியாகம்), ஒருவரது செயற்பாடுகளின் (கர்மா) ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கவேண்டும் என்ற உண்மையை எடுத்துக்காட்டியது. அனைத்து உயிரினங்களும் செயலாற்றுகின்றன; ஆனால் மனிதனால் மட்டுமே, அவன் விரும்பினால், தியாகம் அவனது செயல்களின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருக்குமாறு செய்து செயலாற்ற முடியும். மேலும், மனிதனிடம் இந்தப் பண்பு இருப்பது, எண்ணி, ஆழ்ந்து சிந்திக்கும் அவனுடைய திறனால்தான் சாத்தியமாகிறது. துரதிருஷ்டவசமாக, கோட்பாடுகளை விளக்குவதற்கும், போதிப்பதற்கும் இறைவன் தந்த இந்தத் திறன்களை மனிதன் பயன்படுத்துகிறானே அன்றி, ஒருபோதும் போதிப்பதைக் கடைப்பிடிப்பதற்கு அல்ல! (தெய்வீக அருளுரை, செப்டம்பர் 4, 1979)
தங்களுடைய குழந்தைகளுக்காக எவ்வளவோ தியாகம் செய்யும், உங்களுடைய சொந்தப் பெற்றோரிடமிருந்து தியாகத்தின் தலைசிறந்த மதிப்பைக் கற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் உயிரோடு இருக்கும்வரை உங்களுடைய பெற்றோரை சந்தோஷமாக வைத்துக் கொள்வதே உங்களுடைய கடமையாகும். - பாபா