azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 22 Aug 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 22 Aug 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

The Gayatri is the Universal Prayer enshrined in the Vedas, the most ancient scriptures of man. The Gayatri is usually repeated at dawn, noon and dusk. But God being beyond time, it is a result of our limitations that we talk of dawn and dusk. When we move away from the Sun it is dusk; when we move into the light of the Sun it is dawn. So you need not be bound by the three points of time to recite the prayer. It can be repeated always and everywhere, only one has to ensure that the mind is pure. I would advise you, young people, to recite it when you take your bath. Do not sing cheap and defiling film songs. Recite the Gayatri. When you bathe, the body is being cleansed; let your mind and intellect also be cleansed. Make it a point to repeat it when you bathe as well as before every meal, also when you wake from sleep and when you go to bed. Moreover, repeat 'Shanti' thrice at the end, for that repetition will give peace to three entities in you - body, mind and soul. (Divine Discourse, Jun 20, 1977.)
GAYATRI MANTRA PROMOTES THE ACQUISITION OF DAIVA SHAKTI, DIVINE POWER. - BABA
காயத்ரி என்பது மனிதர்களின் மிகப் பழமையான மறைநூல்களான வேதங்களில் பொதிந்துள்ள உலகளாவிய பிரார்த்தனையாகும். பொதுவாக காயத்ரி மந்திரம் விடியற்காலை, மதியம் மற்றும் மாலையில் உச்சரிக்கப்படுகிறது. ஆனால், இறைவன் காலத்திற்கு அப்பாற்பட்டவன் ஆதலால், விடியற்காலை மற்றும் மாலை என்று நாம் பேசுவது, நமது குறைபாடுகளின் ஒரு விளைவே. நாம் எப்போது சூரியனிலிருந்து விலகி வருகிறோமோ அது மாலை ஆகிறது; நாம் சூரிய வெளிச்சத்திற்குள் எப்போது வருகிறோமோ அது விடியற்காலை ஆகிறது. எனவே, இந்தப் பிரார்த்தனையைச் செய்வதற்கு நீங்கள் மூன்று கால கட்டங்களுக்குள் கட்டுப்பட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. மனம் மட்டும் பரிசுத்தமாக இருப்பதை ஒருவர் உறுதி செய்து கொண்டால், இதை எப்போதும், எங்கும் உச்சரிக்கலாம். நீங்கள் குளிக்கும்போது இதை உச்சரிக்கலாம் என இளைஞர்களான உங்களுக்கு நான் அறிவுறுத்துகிறேன். மலிவான மற்றும் கீழ்த்தரமான திரைப்படப் பாடல்களைப் பாடாதீர்கள். காயத்ரி மந்திரத்தை உச்சரியுங்கள். நீங்கள் குளிக்கும்போது உடல் தூய்மை அடைகிறது; உங்கள் மனம் மற்றும் புத்தியும் கூடத் தூய்மை அடையட்டும். நீங்கள் குளிக்கும் போதும், ஒவ்வொரு முறை உணவு அருந்தும் முன்பும், மேலும் உறக்கத்திலிருந்து எழுந்தவுடனும், உறங்கச் செல்வதற்கு முன்பும் இதை உச்சரிப்பது என்று வைத்துக் கொள்ளுங்கள். மேலும், இறுதியில் "சாந்தி" என்று மூன்றுமுறை சொல்லுங்கள்; அப்படிச் சொல்வது, உங்களுள் உள்ள மூன்று அம்சங்களான, உடல், மனம் மற்றும் ஆத்மாவிற்குச் சாந்தி அளிக்கும். (தெய்வீக அருளுரை, ஜூன் 20, 1977)
காயத்ரி மந்திரம் தெய்வீக சக்தியைப் பெறுவதை ஊக்குவிக்கிறது. - பாபா