azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 17 Aug 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 17 Aug 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

The meditator (dhyani) considers the realisation of Atmic bliss as important, but the promotion of the welfare of the world is also an equally important aim. For carrying out that aim, one must bring certain physical, verbal, and mental tendencies under control. These are usually known as the tenfold sins: the three physical, the four verbal, and the three mental. The physical tendencies are: injury to life, adulterous desire, and theft. The verbal sins are: false alarms, cruel speech, jealous talk, and lies. The mental attitudes are: greed, envy, and denial of God. The person intent on following the path of meditation must take every care that these ten enemies do not even approach. They have to be eschewed completely. The person needs tendencies that will help progress and not those that drag back. One must speak and act only good (shubha), for good alone is auspicious (mangala) and the auspicious alone is Siva. The good is the instrument for merging in Shiva! ( Dhyana Vahini Ch.4)
TO RESURRECT LOVE AND COMPASSION, YOU MUST KILL JEALOUSY
AND SELFISHNESS AND PURIFY YOUR HEARTS. - BABA
தியானம் செய்பவர் (தியானி) ஆத்மானந்தத்தை உணர்வதை முக்கியமானது எனக் கருதுகிறார், ஆனால், உலக நன்மையைப் பேணுவதும் கூட அதே அளவு முக்கியமான ஒரு குறிக்கோளாகும். அந்த இலக்கை நிறைவேற்ற, ஒருவர் உடல், வாக்கு மற்றும் மனோரீதியான சில போக்குகளைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இவை சாதாரணமாக பத்து வகையான பாவங்கள் என்று அழைக்கப்படுகின்றன: உடல்ரீதியாக மூன்று, வாக்குரீதியாக நான்கு மற்றும் மனரீதியாக மூன்று. உயிருக்குத் தீங்கு விளைவிப்பது, விபசார ஆசை மற்றும் திருட்டு ஆகியவை உடல்ரீதியானவை. தவறான அச்சுறுத்தல்கள், கொடூரமான வார்த்தைகள், பொறாமைப் பேச்சு மற்றும் பொய்கள் ஆகியவை வாக்குரீதியான பாவங்களாகும். பேராசை, பொறாமை மற்றும் தெய்வத்தை மறுப்பது ஆகியவையே மனோரீதியான பாவங்கள். தியானப்பாதையைப் பின்பற்ற விழையும் ஒருவர், இந்த பத்து எதிரிகளும் அவரை அணுகக்கூட விடாமல் இருக்கச் செய்வதில் எல்லாவிதமான கவனத்தையும் செலுத்த வேண்டும். அவற்றை முழுமையாக விட்டுவிட வேண்டும். முன்னேற்றத்திற்கு உதவும் மனப்பாங்குகளே ஒருவருக்குத் தேவையானவையே அன்றி பின்னடைவை ஏற்படுத்துபவை அல்ல. ஒருவர் சொல்வதும் செய்வதும் நல்லவையாக (சுபம்) மட்டுமே இருக்க வேண்டும், ஏனெனில், நல்லவையே மங்களகரமானவை, மேலும் மங்களமே சிவம். நல்லவையே சிவனுடன் இரண்டறக் கலப்பதற்கான கருவியாகும்! (தியான வாஹினி, அத்தியாயம்-4)
ப்ரேமையையும், பரிவையும் மீட்டெடுப்பதற்கு, நீங்கள் பொறாமையையும், சுயநலத்தையும் அழித்து, உங்கள் இதயங்களை பரிசுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். - பாபா