azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 14 Aug 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 14 Aug 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

An unruffled mind is very necessary for every aspirant who is marching forward; it is one of the beneficial qualities. Such a mind gives real strength and happiness. Strive to gain it. Though you may fail even in seven attempts, you are sure to succeed in the eighth if you refuse to be dispirited. The story of Bruce, who drew inspiration from a spider and won the honours of victory at the eighth attempt, is worth remembering. What gave him victory? Peace, the unruffled mind. He did not yield to despair, cowardice, or helplessness; he was calm throughout, and he secured success. Even if calamity befalls, the aspirant should not lose heart. The mind must ever be pure, untarnished, calm, and full of courage. No weeping for the past, and no faltering in the performance of the task at hand - that is the mark of an aspirant. Be prepared to gladly face any obstacle in the path. Only such a one can realise the goal!(Prashanthi Vahini Ch.6)
ALWAYS HAVE CALM THOUGHTS. ONLY THEN CAN YOUR MIND HAVE EQUANIMITY. - BABA.
முன்னேறிச் செல்லும் ஒவ்வொரு ஆன்மிக சாதகருக்கும் கலங்காத மனம் மிகவும் அவசியம்; அது பயனளிக்கும் குணங்களில் ஒன்றாகும். இப்படிப்பட்ட ஒரு மனமே உண்மையான சக்தியையும் சந்தோஷத்தையும் அளிக்கிறது. அதனைப் பெறப் பாடுபடுங்கள். ஏழு முயற்சிகளில் நீங்கள் தோல்வி அடைந்தாலும் கூட, நீங்கள் மனச் சோர்வடையாது முயற்சித்தால் எட்டாவது முறை வெற்றி பெறுவது உறுதி. ஒரு சிலந்தியைக் கண்டு உத்வேகம் பெற்று எட்டாவது முயற்சியில் வெற்றிவாகை சூடிய புரூஸின் கதை நினைவுகூறத்தக்கது. அவனுக்கு எது வெற்றி பெற்றுத் தந்தது? சாந்தியும் கலங்காத மனமுமே. அவன் விரக்தி, கோழைத்தனம் அல்லது இயலாமைக்கு இடமளிக்கவில்லை; அவன் முழுவதும் அமைதியாக இருந்து, வெற்றி பெற்றான். பேரிடர் வந்தாலும் கூட ஆன்மிக சாதகர் மனம் தளரக் கூடாது. மனம் எப்போதும் பரிசுத்தமாகவும், மாசற்றும், அமைதியாகவும், தைரியம் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். கடந்ததை எண்ணிக் கண்ணீர் வடிக்காமல் இருப்பது, கையில் எடுத்த பணியை நிறைவேற்றுவதில் தடுமாறாமல் இருப்பது - இதுவே ஒரு ஆன்மிக சாதகரின் லக்ஷணமாகும். பாதையில் வரும் எந்தத் தடையையும் சந்தோஷமாக எதிர்கொள்ளத் தயாராக இருங்கள். இப்படிப்பட்ட ஒருவரே இலக்கை எட்ட முடியும்! (பிரசாந்தி வாஹினி, அத்தியாயம்-6)
எப்போதும் சாந்தமான சிந்தனைகளைக் கொண்டிருங்கள்.
அதன் பின்னரே மனம் சமநிலையைக் கொண்டிருக்க முடியும். - பாபா