azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 10 Aug 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 10 Aug 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

People have an immensity in them; this is the core of Bharathiya thought. It is really a mystery how anyone came to regard themself as condemned to fall! A person might strike us as demonic or divine; in both, the Atma is the reality to the same extent. You can’t say the Atma is less in one and more in the other. When faults are found in someone, the right way is for you to conclude that there are deficiencies in behaviour, that is all! Don’t conclude that there is no divine Atma in that person. As a result of the company one keeps or the inefficiency of the society in which one grew, faults have grown. They are not native to one’s nature, which is Atmic. You have to provide the person with good company and beneficial surroundings, and persuade them to enter them. On no account should you condemn the person as a born incorrigible and keep them apart! ( Sathya Sai Vahini Ch.7)
LIVE WITHOUT HATING OTHERS, CONDEMNING OTHERS, AND SEEKING FAULTS IN OTHERS. - BABA.
மனிதர்கள் அவர்களுள் ஒரு மகத்துவத்தைக் கொண்டவர்கள்; இதுவே பாரதீய (பாரத தேசத்தின்) சிந்தனையின் மையக்கருவாகும். வீழ்ச்சி அடைவதற்காகவே சபிக்கப்பட்டவர்கள் என்று ஒருவர் தன்னைக் கருதுவது ஏன் என்பது உண்மையில் ஒரு மர்மமே! ஒரு மனிதர் அரக்கனாகவோ அல்லது தெய்வீகமானவராகவோ நமக்குத் தோன்றலாம்; இருவருக்கும் உள்ளே ஒரே அளவில் இருக்கும் உண்மை நிலை ஆத்மாவே. ஒருவருள் ஆத்மா குறைவாகவும், மற்றவருள் அதிகமாகவும் உள்ளது என்று நீங்கள் கூற முடியாது. எவரிடமாவது குறைகள் காணப்பட்டால், அவர்களது நடத்தையில்தான் குறைகள் உள்ளன என்ற முடிவிற்கு நீங்கள் வருவதுதான் சரியான முறையாகும்! அந்த மனிதருள் தெய்வீக ஆத்மா இல்லை என்ற முடிவிற்கு வராதீர்கள். ஒருவர் வைத்துள்ள நட்பு வட்டம் அல்லது ஒருவர் வளர்ந்த சமுதாயத்தின் இயலாமை ஆகியவற்றின் விளைவால் தான் குறைகள் வளர்ந்துள்ளன. அவை ஒருவரின் இயல்பு நிலையான ஆத்மாவிற்குச் சொந்தமானவை அல்ல. நீங்கள் அவருக்கு நல்லோரின் நட்புவட்டத்தையும், பயனளிக்கும் சூழ்நிலைகளையும் ஏற்படுத்தி, அவற்றுடன் அவர் சேர்ந்திருக்குமாறு அறிவுறுத்த வேண்டும். எந்தக் காரணத்திற்காகவும் நீங்கள் ஒருவரை ‘பிறவியிலிருந்தே திருத்த முடியாதவர்’ என்று இகழ்ந்து, அவர்களை ஒதுக்கி வைக்கக் கூடாது. (சத்ய சாய் வாஹினி, அத்தியாயம்-7)
மற்றவர்களை வெறுக்காமல், இகழாமல்,
அவர்களிடம் குறைகளைக் காணாமல் வாழுங்கள். - பாபா