azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 05 Aug 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 05 Aug 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Manifest the sacred power within you through self-effort. Do not resort to weak stratagems of imitating others. Instead, absorb the good qualities that others may possess. We plant a seed in the soil. Then, we supply it with the ingredients it needs — water, air, and manure. The seed sprouts, grows into a sapling, and becomes at last a huge tree. You will notice that it does not become soil, manure, air, or water. It makes use of these, but it sticks to its own nature and grows into a tree. Of course, we have much to learn from others. Those who refuse to learn thus declare themselves as fools. You can learn from others whatever can promote your spiritual advancement. Imbibe them to the full, according to the lines laid down for your own progress in your own moral path (dharma). You must live as you, not as someone else. Don’t allow anyone to divert you away from your innate nature!( Sathya Sai Vahini Ch.7)
IMITATION CAN NEVER FORM THE BASIS OF PROGRESS. TO TAKE PRIDE IN IMITATING
OTHERS IS THE FIRST STEP IN SPIRITUAL FALL. - BABA
உங்களுள் உள்ள புனித சக்தியை, சொந்த முயற்சியின் மூலம் வெளிப்படுத்துங்கள். மற்றவர்களைப் பின்பற்றுவது என்ற பலவீனமான தந்திரங்களை நாடாதீர்கள். மாறாக, மற்றவர்கள் கொண்டிருக்கக்கூடிய நல்ல குணங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். நாம் ஒரு விதையை மண்ணில் விதைக்கிறோம். பின்னர், அதற்குத் தேவையான பொருட்களான நீர், காற்று மற்றும் உரம் ஆகியவற்றை நாம் வழங்குகிறோம். விதை முளைத்து, செடியாகி, இறுதியில் ஒரு பெரிய மரமாக ஆகி விடுகிறது. மண், உரம், காற்று அல்லது நீராக அது ஆவதில்லை என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். அது இவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறது, ஆனால், தனது சொந்த இயல்பிற்கு ஏற்ப ஒரு மரமாக வளர்ந்து விடுகிறது. நாம் பிறரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கத்தான் செய்கிறது. இவ்வாறு கற்றுக்கொள்ள மறுப்பவர்கள், தங்களையே முட்டாள்கள் என்று அறிவித்துக் கொள்கிறார்கள். உங்களுடைய ஆன்மிக முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் எதையும் நீங்கள் பிறரிடமிருந்து கற்றுக் கொள்ளலாம். அற வழியில் (தர்மம்) நீங்கள் முன்னேறுவதற்காக வகுத்துள்ள விதிகளுக்குட்பட்டு அவற்றை முழுமையாகப் பின்பற்றுங்கள். நீங்கள் நீங்களாக வாழ வேண்டுமே அன்றி, வேறு யாரோ ஒருவரைப் போல அல்ல. உங்களுடைய அகத்தன்மையிலிருந்து உங்களை திசை திருப்ப வேறு எவரையும் அனுமதிக்காதீர்கள்! (சத்ய சாய் வாஹினி, அத்தியாயம்-7)
பிறரைப் பார்த்துப் பின்பற்றுதல் என்பது ஒருபோதும் முன்னேற்றத்தின் அடிப்படையாக இருக்க முடியாது. பிறரைப் பின்பற்றுவதில் பெருமிதம் கொள்வதே ஆன்மிக வீழ்ச்சியின் முதல் படியாகும். - பாபா