azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 31 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 31 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

The discipline of the self is the basic foundation for successful living. Through that alone can one attain real and lasting peace. And, without peace, there can be no happiness. Peace is the very nature of the Atma. It coexists only with a pure heart; it is never associated with a greedy heart full of desires. Peace is the distinguishing mark of yogis, sages, and the wise. It will flee away from the selfish and the sensual. It hates the company of such persons. Peace is full of spiritual uplift and the wisdom that is the natural accompaniment of bliss. Genuine peace is won only by control of the senses. Then, it can be called supreme peace. The experience of that stage is the ‘Stream of Supreme Peace’ (Prasanthi Vahini). Peace is earned and maintained without disturbance by calming the mental agitation that surges like waves, and levelling the swirls and whirls of likes, dislikes, love, hate, sorrow, joy, hope, and despair.( Prasanthi Vahini, Ch 2)
LOVE IS THE ONLY MEANS TO GET PEACE. THE FUEL OF LOVE YIELDS THE DIVINE FLAME OF PEACE. - BABA
சுயக்கட்டுப்பாடே வெற்றிகரமான வாழ்க்கைக்கான அடிப்படை அஸ்திவாரமாகும். அதன் மூலம் மட்டுமே ஒருவர் உண்மையான, நிரந்தரமான சாந்தியைப் பெற முடியும். சாந்தி இல்லையேல் சந்தோஷமில்லை. ஆத்மாவின் இயல்பு சாந்தியே. ஒரு தூய இதயத்தோடு மட்டுமே அது சேர்ந்து இருக்க முடியும்; அது ஒருபோதும் வேட்கைகள் நிறைந்த, பேராசை கொண்ட ஒரு இதயத்துடன் தொடர்புடையது அல்ல. சாந்தியே, யோகிகள், முனிவர்கள் மற்றும் ஆன்றோரின் தனிச் சின்னமாகும். சுயநலம் மற்றும் புலனாசை கொண்டோரிடமிருந்து அது விலகி ஓடிவிடும். இப்படிப்பட்ட மனிதர்களின் நட்பை அது வெறுக்கிறது. சாந்தி என்பது, ஆன்மிக முன்னேற்றமும், பேரானந்தத்துடன் இயல்பாகவே இணைந்து வரும் ஞானமும் நிறைந்ததாகும். உண்மையான சாந்தியை, புலனடக்கத்தின் மூலம் மட்டுமே பெற முடியும். பின்னர் அதனை பிரசாந்தி என்று அழைக்கலாம். அந்த நிலையின் அனுபவமே "பிரசாந்தியின் ஓடை" (பிரசாந்தி வாஹினி) ஆகும். அலைகள் போல ஆர்ப்பரிக்கும் மனக்கிளர்ச்சிகளை அமைதிப்படுத்துவதன் மூலமும், விருப்பு, வெறுப்பு, நேசம், த்வேஷம், துக்கம், சுகம், நம்பிக்கை, விரக்தி ஆகியவற்றின் சுழற்சி மற்றும் சுழல்களை சமன் செய்வதன் மூலமும், இந்த சாந்தி பெறப்பட்டு இடையூறுகள் இன்றி பராமரிக்கப்படுகிறது. (பிரசாந்தி வாஹினி, அத்தியாயம்-2)
ப்ரேமையே சாந்தியைப் பெறுவதற்கான ஒரே வழியாகும். ப்ரேமை எனும் எரிபொருள் சாந்தி எனும் தெய்வீக ஜோதியை ஒளிரச்செய்கிறது. – பாபா