azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 28 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 28 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

The mind spins a cocoon for the individual soul to be imprisoned in. Karma, which is the activity of ignorance (maya), encloses the individual in its grip. It is the husk that makes the paddy seed grow and yield more paddy plants and more grains of paddy. Remove the husk, and there is no more sprouting! The husk (karma) makes the individual soul sprout and undergo the pleasure and pain produced by the impressions unconsciously left on the mind by past good or bad actions (vasanas) and perform purificatory rites and sacred ceremonies. Hence, you reward and punish yourself as the result of your own activities! You are born now because you wished to come here; you gravitate to the level to which your deeds drag or lift you! You make your own future by your thoughts, desires and deeds. ( Divine Discourse July 17,1962)
EVERYONE CARRIES THEIR DESTINY IN THEIR OWN HANDS. - BABA
ஜீவாத்மாவை சிறையில் அடைப்பதற்காக அதைச் சுற்றி மனம் ஒரு கூட்டைப் பின்னிவிடுகிறது. அறியாமையின் (மாயை) செயல்பாடான கர்மா, மனிதனைத் தன்வசம் பிடித்து வைத்துக் கொள்கிறது. உமியே நெல் விதையை முளைக்க வைத்து, அதிகமான நெற்செடிகளையும் நெல் தானியங்களையும் விளைவிக்கிறது. உமியை நீக்கி விடுங்கள், நெல் முளைப்பதே இருக்காது! உமி போன்ற கர்மாவே, ஜீவாத்மாவை பிறக்க வைத்து, முந்தைய நல்ல அல்லது தீய செயல்களின் (வாசனைகள்) விளைவாக மனதில் எஞ்சி இருக்கும் பதிவுகளால் ஏற்படும் இன்ப, துன்பங்களை அனுபவிக்கவும், பரிகார ஹோமங்கள் மற்றும் புனிதச் சடங்குகளைச் செய்யவும் வைக்கிறது. எனவே, உங்கள் சொந்த நடவடிக்கைகளின் விளைவாக நீங்களே உங்களுக்கு வெகுமதி மற்றும் தண்டனையை அளித்துக் கொள்கிறீர்கள்! இங்கு வர வேண்டும் என்று நீங்கள் விரும்பியதால் இப்போது நீங்கள் பிறந்திருக்கிறீர்கள்; உங்கள் செயல்களால் இழுக்கப்பட்ட அல்லது உயர்த்தப்பட்ட நிலைக்கு ஈர்க்கப்படுகிறீர்கள். உங்களுடைய சிந்தனைகள், ஆசைகள் மற்றும் செயல்களின் மூலம் உங்களுடைய எதிர்காலத்தை நீங்களே அமைத்துக் கொள்கிறீர்கள். (தெய்வீக அருளுரை, ஜூலை 17, 1962)
ஒவ்வொருவரும் அவரவர் தலைவிதியை அவரவர் கைகளில் தான் ஏந்தியுள்ளனர். - பாபா