azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 26 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 26 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Do not do spiritual practice on and off; do it in an unbroken, disciplined way. Otherwise, it will be like watering a plant for some time, leaving it to go dry and starting again. The centre point between eyebrows on which you are asked to concentrate is not the point where your eyebrows meet in the centre of your forehead; it is a point in your inner awareness, your heart (hridaya). Like celestial damsels that were sent by Indra to break the penance of sages, you will get nine varieties of music during meditation, but do not be elated by that and suspend your meditation. Resolve with a sincere desire to succeed. Even Garuda cannot reach the goal if it does not spread its wings and leap into the sky. So, make a move, put a step forward. That is the immediate task. Your resolve on this day should be to start with a sincere desire to succeed. Light will be shed by the grace of the Lord. The Lord has come to help you.( Divine Discourse,July 17,1962)
YOU DO NOT PRAY TO THE SUN TO MAKE THE RAYS FALL ON YOU, DO YOU? REMOVE THE OBSTACLES BETWEEN YOU AND THE SUN AND THE RAYS ARE ON YOU. - BABA
ஆன்மிக சாதனையை விட்டு விட்டுச் செய்யாதீர்கள்; அதை ஒரு கட்டுப்பாடுடன் இடையறாது செய்யுங்கள். இல்லை என்றால் அது, ஒரு செடிக்கு சிறிது காலம் நீர் பாய்ச்சிவிட்டு, பின்னர் அதை காய்ந்து போக விட்டு, மீண்டும் ஆரம்பிப்பது போலாகி விடும். நீங்கள் ஒருமுகப்படுத்தும்படி அறிவுறுத்தப்படும் புருவங்களுக்கு இடையேயான மையப்புள்ளி, உங்கள் நெற்றியின் மத்தியில் உள்ள உங்கள் புருவங்கள் சந்திக்கும் இடம் அல்ல; இது உங்கள் உள்ளுணர்வின், இதயத்தின் (ஹ்ருதயா) ஒரு மையப்புள்ளியாகும். முனிவர்களின் தவத்தைக் கலைப்பதற்காக இந்திரன் அனுப்பிய தேவகன்னியரைப் போல, தியானத்தின் போது ஒன்பது விதமான இசைகளை நீங்கள் கேட்பீர்கள்: ஆனால் அவற்றால் உற்சாகம் அடைந்து, உங்கள் தியானத்தை நிறுத்திவிடாதீர்கள். வெற்றி பெறவேண்டும் என்ற ஒரு சிரத்தையுடன் உறுதியாக இருங்கள். தனது இறக்கைகளை விரித்து, வானத்தில் பாய்ந்து சென்று பறந்தாலொழிய கருடன் கூட இலக்கை எட்ட முடியாது. எனவே, நகர்ந்து ஒரு அடி முன்னெடுத்து வையுங்கள். அதுவே உடனடியாக செய்யவேண்டிய பணி. வெற்றி பெற வேண்டும் என்ற ஒரு சிரத்தையான ஆவலுடன் ஆரம்பிப்பதே உங்களுடைய இன்றைய தீர்மானமாக இருக்க வேண்டும். இறைவனது அருளால் ஒளி கிடைக்கும். உங்களுக்கு உதவுவதற்காகவே இறைவன் வந்துள்ளான். (தெய்வீக அருளுரை, ஜூலை 17, 1962)
சூரியக்கதிர்கள் உங்கள் மீது படவேண்டுமென சூரியனிடம் நீங்கள் பிரார்த்தனையா செய்கிறீர்கள்? உங்களுக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தடைகளை நீக்குங்கள்; பின், சூரியக்கதிர்கள் உங்கள் மீதுதான்! - பாபா