azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 25 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 25 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Know that waking from sleep is but birth and going into sleep is death. Every morning, pray on waking up, “Oh Lord, I am born now from the womb of sleep. I am determined to carry out all tasks today as offering to Thee, with Thee ever present before my mind’s eye. Make my thoughts, words and deeds sacred and pure. Let me not inflict pain on anyone; let no one inflict pain on me. Direct and guide me, this day.” And when you enter the portals of sleep at night, pray, “Oh Lord! The tasks of this day, whose burden I placed on You this morning, are over. It was Thee who made me think, talk, walk and act. I therefore place at Thy Feet all my thoughts, words and deeds. My task is done. Receive me, I am coming back to you.” Adopt these as your daily prayers. This prayerful attitude will so educate your impulses that the Inner Intelligence will be fully revealed.( Divine Discourse,July 27,1961)
PRAYER IS A VERY POWERFUL WEAPON. IN CRITICAL TIMES, EVERY ONE OF YOU SHOULD PRAY DEEPLY AND SINCERELY FOR THE PEACE AND PROSPERITY OF THE UNIVERSE. - BABA
உறக்கத்திலிருந்து எழுவதே பிறப்பு அன்றி வேறில்லை என்பதையும், உறங்கச் செல்வதே இறப்பு என்பதையும் அறிந்திருங்கள். ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்தவுடன், "இறைவா! நான் இப்போது உறக்கம் எனும் கருப்பையிலிருந்து பிறந்திருக்கிறேன். உன்னை என் மனக்கண் முன் எப்போதும் இருக்குமாறு செய்து, அனைத்து கடமைகளையும் இன்று உனக்கு அர்ப்பணமாக ஆற்ற உறுதி பூண்டுள்ளேன். என்னுடைய சிந்தனைகள், சொற்கள் மற்றும் செயல்களை புனிதமானவையாகவும், பரிசுத்தமானவையாகவும் ஆக்குவாயாக. நான் யாருக்கும் துன்பம் விளைவிக்காமல் இருக்க வேண்டும்; எவரும் எனக்கு துன்பம் விளைவிக்காமல் இருக்கட்டும். இன்று என்னை வழிகாட்டி நடத்திச் செல்க" என்று பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் இரவில் உறங்கச் செல்லும்போது, “இறைவா! இன்று காலை நான் உன் மீது பாரமாக போட்ட இன்றைய பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. என்னைச் சிந்திக்க, பேச, நடக்க மற்றும் செய்ய வைத்தவன் நீயே. எனவே, என் அனைத்து சிந்தனைகள், சொற்கள் மற்றும் செயல்களை உன் திருப்பாதத்தில் சமர்ப்பிக்கிறேன். என் பணி முடிந்து விட்டது. நான் உன்னிடம் திரும்பி வருகிறேன், என்னை ஏற்றுக்கொள்” என்று பிரார்த்தனை செய்யுங்கள். இவற்றை உங்களுடைய அன்றாடப் பிரார்த்தனைகளாக ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த பிரார்த்தனை மனப்பாங்கு உங்கள் உந்துதல்களை பண்படுத்தி, மெய்யறிவு முழுமையாக வெளிப்படச்செய்யும். (தெய்வீக அருளுரை, ஜூலை 27, 1961)
பிரார்த்தனை மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதமாகும். இக்கட்டான சமயங்களில், பிரபஞ்சத்தின் சாந்தி மற்றும் வளமைக்காக நீங்கள் ஒவ்வொருவரும் ஆழ்ந்து, சிரத்தையாகப் பிரார்த்திக்க வேண்டும். - பாபா