azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 24 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 24 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

The Guru is needed when you have the Guri (goal or aim in Telugu). If you do not have that urge, what can the teacher do? Strewing precious seeds on sand or rock is a sheer waste! Inner prompting to see light must send aspirants to the teacher or must draw the teacher to wherever the aspirant is. You must inquire and discriminate: Do objects grant happiness? Is anyone happy? How can one be happy through multiplications of desire and frantic efforts to feed the raging fire? At last, you will, by your own experience, discover that happiness is an inner gift, a spiritual treasure that can be won by equanimity. The moon is the presiding deity of the mind; it must shine, cool and comforting, eternally, in fullness, in the inner firmament of the heart (hriday-akasa). The external material moon waxes and wanes, but the internal mind should be trained to stand up against modifications and moods, and have no marks on it; it should always be a full moon for the victorious spiritual aspirant! ( Divine Discourse, July,17,1962)
OBEY THE GURU, FOLLOW HIS INSTRUCTIONS, PROGRESS ALONG THE SPIRITUAL ROAD - THESE ARE THE BEST MEANS OF WORSHIPPING THE GURU’S FEET. - BABA
எப்போது உங்களுக்கு ‘குறி’ (தெலுங்கில் குறிக்கோள் என்று பொருள்) இருக்கிறதோ, அப்போது குரு தேவை. உங்களுக்கு அந்த ஏக்கம் இல்லை என்றால், குரு என்ன செய்ய முடியும்? விலையுயர்ந்த விதைகளை மணலிலோ அல்லது பாறையிலோ தூவுவது வீணே! (ஞான) ஜோதியைக் காணவேண்டும் என்ற அகஉந்துதல் சாதகர்களை குருவிடம் ஈர்க்க வேண்டும் அல்லது சாதகர் எங்கு இருந்தாலும் அங்கு குருவை ஈர்க்க வேண்டும். நீங்கள் ஆராய்ந்து, பகுத்தறிய வேண்டும்: பொருட்கள் சந்தோஷத்தைத் தருகின்றனவா? யாராவது சந்தோஷமாக இருக்கிறார்களா? பன்மடங்காகப் பெருகும் ஆசைகள் மற்றும் கொழுந்து விட்டெரியும் அதன் நெருப்பில் எண்ணெய் ஊற்றத் துடிக்கும் முயற்சிகள் ஆகியவை மூலம் ஒருவர் எவ்வாறு சந்தோஷமாக இருக்க முடியும்? இறுதியாக, சந்தோஷம் என்பது ஒரு உள்ளார்ந்த பரிசும், சமச்சீரான மனப்பாங்கின் மூலம் பெறப்படும் ஒரு ஆன்மிகப் பொக்கிஷமும் ஆகும் என்பதை உங்களுடைய சொந்த அனுபவத்தின் மூலம் கண்டுகொள்வீர்கள். சந்திரன் மனதின் அதிபதி; இதயம் எனும் ஆகாயத்தில் (ஹ்ருதய-ஆகாஸ), அது, நிரந்தரமாக, முழுமையாக, குளிர்ச்சியாக, இதமாக பிரகாசிக்க வேண்டும். வெளிப்புறத்தில் இருக்கும் சந்திரன் வளரும், தேயும்; ஆனால் அக மனதில் கறைகள் எதுவும் இன்றி, மாற்றங்கள் மற்றும் மனநிலைகளை எதிர்த்து நிற்பதற்கான பயிற்சியை அதற்கு அளிக்க வேண்டும்; வெற்றி வாகை சூடும் ஆன்மிக சாதகருக்கு அது எப்போதும் முழு நிலவாகவே இருக்க வேண்டும்! (தெய்வீக அருளுரை, ஜூலை 17, 1962)
குருவிற்குக் கீழ்ப்படியுங்கள், அவரது கட்டளைகளைப் பின்பற்றுங்கள், ஆன்மிகப்பாதையில் முன்னேறுங்கள் - குருவின் திருவடிகளை வழிபடுவதற்கு இவையே மிகச் சிறந்த வழியாகும். - பாபா