azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 22 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 22 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Soap and water are needed to wash accumulated dirt off one’s clothes. So too, spiritual knowledge and penance are essential when one is anxious to remove dirt that is stuck to the mind. Only when both are done, can levels of consciousness be thoroughly cleansed. No vehicle can move without two wheels, nor can birds fly on one wing. So too, none can be purified or rendered holy without spiritual learning and spiritual austerity. Spiritual austerity (tapas) doesn’t mean positioning oneself upside down, head on ground & feet held up, like bats. Nor is it renunciation of possessions, properties, wife and children, or holding nose to regulate breath. Physical actions, vocal assertions, and mental resolve — all three must be in unison. Thoughts, speech, and actions - all must be pure. This is real spiritual austerity. Moreover, these three must be coordinated not by compulsions of duty; but for the contentment of the Self. Spiritual Effort (Tapas) must be undertaken to satisfy one’s inner yearnings. This struggle is the essence of Tapas! ( Vidya Vahini, ch,12)
WHATEVER THOUGHTS SPROUT IN YOUR MIND, TO UTTER THEM AS WORD
AND TO PUT THEM IN PRACTICE AS YOUR WORK, THAT IS TAPAS. - BABA
ஒருவரது துணிகளில் சேர்ந்துள்ள அழுக்கை நீக்குவதற்கு சோப்பும் நீரும் தேவை. அதைப் போலவே, மனதில் ஒட்டிக்கொண்டுள்ள அழுக்கை நீக்க விழையும் ஒருவருக்கு ஆன்மிக ஞானமும், தவமும் தேவை. இரண்டையும் செய்தால் தான், உள்ளுணர்வின் நிலைகளை முழுமையாக தூய்மைப்படுத்த முடியும். இரண்டு சக்கரங்கள் இல்லாமல் எந்த வண்டியும் நகர முடியாது, பறவைகளும் ஒரே ஒரு இறக்கையைக் கொண்டு பறக்க முடியாது. அதைப் போலவே, ஆன்மிகக் கல்வியும், தவமும் இன்றி எவரையும் பரிசுத்தமாக்கவோ அல்லது புனிதப்படுத்தவோ முடியாது. தவம் என்றால், வௌவ்வால்களைப் போல ஒருவர் தன்னைத் தானே, தலையை பூமியிலும் கால்களை மேலே உயர்த்தியும், தலைகீழாகக் கவிழ்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று பொருளல்ல. உடமைகள், சொத்துக்கள், மனைவி, மக்கள் ஆகியோரைத் துறப்பதும் அல்லது சுவாசத்தைக் கட்டுப்படுத்த மூக்கைப் பிடித்துக்கொண்டு இருப்பதும் கூட அல்ல. பௌதீகமான செயல்கள், பேசும் சொற்கள் மற்றும் மனதின் சிந்தனைகள் என்ற இந்த மூன்றும் ஒன்றாக இருக்க வேண்டும். சிந்தனைகள், சொற்கள் மற்றும் செயல்கள் அனைத்தும் பரிசுத்தமானவையாக இருக்க வேண்டும். இதுவே உண்மையான தவம். மேலும் இவை மூன்றையும் ஒருங்கிணைப்பது என்பது கடமையின் கட்டாயமாக இல்லாமல், ஆத்ம திருப்திக்காக இருக்க வேண்டும். ஒருவரது அகத்தின் ஏக்கங்களைத் திருப்திப்படுத்துவதற்காக தவத்தை மேற்கொள்ள வேண்டும். இந்தப் போராட்டமே தவத்தின் சாரமாகும்! (வித்யா வாஹினி, அத்தியாயம்-12)
உங்கள் மனதில் தோன்றும் எந்த சிந்தனைகளாக இருந்தாலும், அவற்றை வார்த்தைகளாக எடுத்துச் சொல்லி, அவற்றை உங்கள் செயலாக நடைமுறைப்படுத்துவதே தவமாகும். - பாபா