azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 20 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 20 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Peace is the nursery of all happiness and all joy. Thyagaraja knew this, for he sang, “No peace, no happiness”. All men need it, whoever they are, be they self-restrained men or vedantins, ascetics or scholars, pious men or philosophers. But people are unable to stand still even for a moment! Absence of mere anger cannot be taken as peace. The winning of a desired object and the satisfaction one then gets should not be confused with peace. The peace that has pervaded the heart must not be shaken subsequently for any reason; only that type of peace (shanti) deserves to be called supreme peace (prasanthi). Supreme peace has no ups and downs; it cannot be partial in adversity and complete in prosperity. It cannot be one thing today and another tomorrow. Always maintaining the same even flow of bliss (ananda), that is supreme peace. (Prasanthi Vahini, Ch.1)
WHEN ONE CONSTANTLY THINKS, SPEAKS AND DOES GOOD, PEACE WILL ENSUE. - BABA
சாந்தியே அனைத்து சந்தோஷம் மற்றும் ஆனந்தத்தின் விளைநிலமாகும். தியாகராஜர் இதை அறிந்து தான், "சாந்தி இல்லையென்றால், சந்தோஷமில்லை" என்று பாடினார். சுயக்கட்டுப்பாடு உடையவர்கள், வேதாந்திகள், சந்நியாசிகள், அறிவாளிகள், பக்திமான்கள் அல்லது தத்துவவாதிகள் என யாராக இருந்தாலும், அனைவருக்கும் இது தேவையே. ஆனால், மக்களால் ஒரு கணமேனும் அசையாமல் நிற்க முடிவதில்லை! வெறும் கோபம் இல்லாமல் இருப்பதை, சாந்தி என்று எடுத்துக் கொள்ள முடியாது. விரும்பும் ஒரு பொருள் கிடைத்த பிறகு ஒருவர் அடையும் திருப்தியை, சாந்தி என்று எண்ணி குழப்பிக் கொள்ளக் கூடாது. எந்தவொரு காரணத்திற்காகவும் இதயத்தில் பரவிய சாந்தி பின்னர் குலையக்கூடாது; அப்படிப்பட்ட சாந்தியே, ப்ரசாந்தி என அழைக்கப்படத் தகுதியானதாகும். ப்ரசாந்திக்கு ஏற்றமோ இறக்கமோ கிடையாது; அது வறுமையில் நிறைவற்றதாகவும், வளமையில் நிறைவானதாகவும் இருக்க முடியாது. இன்று ஒன்றாகவும், நாளை மற்றொன்றாகவும் அது இருக்க முடியாது. எப்போதும் ஒரே மாதிரியான சீரான ஆனந்த நீரோட்டத்தைக் கொண்டிருப்பதே ப்ரசாந்தியாகும். (ப்ரசாந்தி வாஹினி, அத்தியாயம்-1)
எப்போது ஒருவர் இடையறாது நல்லதையே சிந்திப்பது, சொல்வது, செய்வது ஆகியவற்றை மேற்கொள்கிறாரோ அப்போதுதான் சாந்தி ஏற்படும். - பாபா