azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 18 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 18 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Many are not even aware of the meaning of the phrase supreme peace (prasanthi). It is the backbone of an individual and, for every spiritual aspirant (sadhaka), their very breath. The word is taken by each to mean something different. Many feel they have peace when some worldly desire that was vexing them is satisfied! But that is not real peace; it is only a temporary short-lived interval between one worry and another. The syllable ‘pra’ in Prasanthi means expanding, enlarging (vikasa), so Prasanthi means that type of peace, that is to say, the absence of desire, anger, greed, and hatred! Supreme peace means peace attained by successful elimination of qualities grouped under desire (kama) and anger (krodha). This process of elimination, called ‘developing equanimity (sama)’, is very essential for all. All spiritual aspirants must be constantly engaged in practicing it.( Prasanthi Vahini, Ch.1)
GOD IS LOVE. GOD IS PEACE. GOD IS STRENGTH. - BABA
ப்ரசாந்தி என்ற வார்த்தையின் அர்த்தம் கூட பலருக்குத் தெரியவில்லை. அது ஒருவரின் முதுகெலும்பாகவும், ஒவ்வொரு ஆன்மிக சாதகரின் உயிர்மூச்சாகவும் விளங்குகிறது. இந்த வார்த்தையின் அர்த்தத்தை ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக புரிந்து கொள்கிறார்கள். அவர்களை வாட்டும் உலகியலான ஏதோ ஒரு ஆசை நிறைவேறிவிட்டால் அவர்களுக்கு சாந்தி கிடைக்கும் என பலர் நினைக்கிறார்கள்! ஆனால் அது உண்மையான சாந்தி அல்ல; அது, ஒரு கவலைக்கும் மற்றொரு கவலைக்கும் நடுவே வரும் தாற்காலிகமான குறுகிய கால இடைவெளி மட்டுமே. ப்ரசாந்தி என்ற வார்த்தையில் உள்ள ‘ப்ர’ என்ற பதத்தின் பொருள் விரிவடைதல், விரிவுபடுத்துதல் (விகாச); அதாவது ப்ரசாந்தி என்றால் ஆசை, கோபம், பேராசை மற்றும் வெறுப்பு இல்லாத சாந்தி என்பதாகும்! ப்ரசாந்தி என்றால், ஆசை (காமம்) மற்றும் கோபம் (க்ரோதம்) என்பவற்றின் கீழ்வரும் குணங்களை வெற்றிகரமாக அழித்துவிடுவதன் மூலம் அடையப்படும் சாந்தி என்பதாகும். "சமச்சீரான மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளுதல் (ஸமா)" என்று அழைக்கப்படும் இந்த தீய குணங்களை அழிக்கும் முறை அனைவருக்கும் அத்தியாவசியமாகும். ஆன்மிக சாதகர்கள் அனைவரும் இதைக் கடைப்பிடிப்பதில் இடையறாது ஈடுபட வேண்டும். (ப்ரசாந்தி வாஹினி, அத்தியாயம்-1)
இறைவனே ப்ரேமை, இறைவனே சாந்தி, இறைவனே சக்தி. - பாபா