azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 15 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 15 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

In a piece of cloth, when the threads are taken out, only the cotton remains and if the cotton is burnt the cloth ceases to exist. Similarly, when desires are eliminated, the "I" and the mind will go. It has been said that destruction of the mind is the means to the realisation of God. The cessation of the mind can be definitely brought about by the gradual elimination of desires, like the removal of threads from a cloth. Finally, desires have to be consumed in the fire of detachment (Vairagya). Look upon life as one long railway journey. In this journey, it is not good to carry heavy luggage. There are stations on the way like Arti (suffering), Artharthi (desire for objects), jignasu (yearning for understanding) and Jnani (Self-realisation). The less luggage one carries the more easily and quickly one can get through various stages and reach the destination. The primary requisite, therefore, is the eradication of desires. .( Divine Discourse Oct 12, 1983)
TRUE FREEDOM CAN COME ONLY WHEN ONE IS FREE FROM THE IMPULSES OF THE MIND. - BABA.
ஒரு துணியிலிருந்து நூல் இழைகளை எடுத்து விட்டால், பஞ்சு தான் மிஞ்சி இருக்கும்; பஞ்சை எரித்து விட்டால், துணியே இருக்காது. அதைப் போலவே, ஆசைகள் அழிக்கப்படும் போது, "நான்" என்பதும், மனமும் இல்லாமல் போய்விடும். மனதை அழிப்பதே இறைவனை உணர்வதற்கான வழி என்று கூறப்படுகிறது. ஒரு துணியிலிருந்து நூலிழைகளை நீக்குவதைப் போல, படிப்படியாக ஆசைகளை நீக்குவதன் மூலம், கண்டிப்பாக மனமே இல்லாமல் செய்ய முடியும். இறுதியில், பற்றின்மை (வைராக்கியம்) என்ற தீயில் ஆசைகள் எரிக்கப்பட வேண்டும். வாழ்க்கையை ஒரு நீண்ட ரயில் பயணம் போலக் கருதுங்கள். இந்தப் பயணத்தில் அதிக சுமையை எடுத்துச் செல்வது நல்லதல்ல. செல்லும் வழியில், ஆர்த்தி (துன்பம்), அர்த்தார்த்தி (பொருட்களின் மீதான ஆசை), ஜிக்ஞாசு (ஞானம் அடைவதற்கான ஏக்கம்) மற்றும் ஞானி (தன்னை உணர்தல்) என்ற ஸ்டேஷன்கள் இருக்கின்றன. எந்த அளவிற்கு ஒருவர் குறைந்த சுமையை எடுத்துச் செல்கிறாரோ, அந்த அளவிற்கு விரைவாகவும், எளிதாகவும் ஒருவர் பல நிலைகளைக் கடந்து, இலக்கை அடைய முடியும். எனவே, முதன்மையான தேவை, ஆசைகளை நீக்குவதே. (தெய்வீக அருளுரை, அக்டோபர் 12, 1983)
மனதின் உந்துதல்களிலிருந்து ஒருவர் விடுபடும்போது
மட்டுமே உண்மையான சுதந்திரம் கிடைக்கும். - பாபா