azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 10 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 10 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

From the 46 maxims of conduct: 38) Instead of searching for others’ faults, search for your own, uproot them, and throw them off. It is enough if you search and discover one fault of yours — that is better than discovering tens of hundreds of faults in others. 39) Even if you can’t or won’t do any good deed, don’t conceive or carry out any bad deed. 40) Whatever people may say about the faults that you know are not in you, don’t feel for it. As for the faults that are in you, try to correct them yourself, even before others point them out to you. Don’t harbour anger or bitterness against people who point out your faults; don’t retort, pointing out their faults, but show your gratitude to them. Trying to discover their faults is a greater mistake on your part. It is good for you to know your faults; it is no good for you to know others’ faults.( Sandeha Nivarini, Ch.7)
CLOSE YOUR EYES TO OTHERS’ FAULTS, BUT KEEP THEM OPEN TO SEE YOUR OWN. - BABA.
46 நன்னெறிக் கோட்பாடுகளிலிருந்து: 38) பிறர் குறைகளைத் தேடுவதற்கு பதிலாக, உங்களுடையவற்றைத் தேடிக் கண்டுபிடித்து, அவற்றை வேரோடு பிடுங்கி எறியுங்கள். உங்களுடைய ஒரு குறையை நீங்கள் தேடிக் கண்டுபிடித்தாலே போதும் - மற்றவர்களுடைய ஆயிரக்கணக்கான குறைகளைக் கண்டுபிடிப்பதை விட அது எவ்வளவோ மேலானதாகும். 39) உங்களால் ஏதாவது நல்ல செயலை செய்ய முடியாமலோ அல்லது நீங்கள் அதைச் செய்யாமலோ போனாலும் கூட, எந்தத் தீய செயலையும் செய்யத் திட்டமிடவோ, செய்யவோ முற்படாதீர்கள். 40) உங்களிடம் இல்லாத குறைகளைப் பற்றி மக்கள் என்ன பேசினாலும், அவற்றைப் பொருட்படுத்தாதீர்கள். உங்களிடம் இருக்கும் குறைகளைப் பொறுத்தவரை, அவற்றை உங்களுக்கு மற்றவர்கள் சுட்டிக் காட்டினால், அவற்றை நீங்களே திருத்திக்கொள்ள முயலுங்கள். உங்களுடைய குறைகளைச் சுட்டிக்காட்டுபவர்கள் மீது கோபமோ அல்லது மனக்கசப்போ கொண்டிருக்காதீர்கள்; ஏட்டிக்குப் போட்டியாக அவர்களுடைய குறைகளைச் சுட்டிக்காட்டாமல், உங்களுடைய நன்றியுணர்வை அவர்களிடம் வெளிப்படுத்துங்கள். அவர்களுடைய குறைகளைக் கண்டுபிடிக்க முயல்வது, உங்களுடைய தரப்பில் மிகப் பெரிய தவறாகும். உங்களுடைய குறைகளைத் தெரிந்து கொள்வது உங்களுக்கே நல்லது; பிறருடைய குறைகளைத் தெரிந்து கொள்வதால் உங்களுக்கு எந்த நன்மையும் இல்லை. (ஸந்தேஹ நிவாரிணி, அத்தியாயம் 7)
பிறருடைய குறைகளைக் காணும்போது உங்கள் கண்கள் மூடியிருக்கட்டும்; ஆனால் உங்களுடைய குறைகளைக் காண்பதற்கு அவை திறந்திருக்கட்டும். - பாபா