azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 06 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 06 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

From the 46 maxims of conduct: 16. Be always vigilant, without a moment’s carelessness, against the eight sins that the mind perpetrates: craving (kama), anger (krodha), greed (lobha), attachment (moha), impatience, hatred, egotism, and pride. One’s primary duty is to keep these things at a safe distance from oneself. 17. The mind speeds fast, pursuing wrong actions. Without letting it hurry like that, remember the name of the Lord at that time or attempt to do some good deed or other. Those who do thus will certainly become fit for the Lord’s grace. 18. First, give up the evil tendency to feel impatient at the prosperity of others and the desire to harm them. Be happy that others are happy. Sympathise with those who are in adversity and wish for their prosperity. That is the means of cultivating the love for God. 19. Patience is all the strength one needs. 20. Those anxious to live in joy must always be doing good( Sandeha Nivaarani, ch.7)
ANGER AND JEALOUSY ARE THE MOST FEARFUL ENEMIES OF HUMANITY. THEY DESTROY THE FEELINGS OF UNITY AND FORBEARANCE. - BABA
46 நன்னெறிக் கோட்பாடுகளிலிருந்து: 16. மனம் செய்யும் எட்டு பாவங்களுக்கு எதிராக ஒரு கணமும் கவனக்குறைவாக இல்லாமல் எப்போதும் விழிப்புடன் இருங்கள்: காமம், க்ரோதம், லோபம், மோகம், பொறுமையின்மை, வெறுப்பு, அகந்தை மற்றும் தற்பெருமை. இந்த விஷயங்களை, ஒருவர் தன்னிடமிருந்து ஒரு பாதுகாப்பான தூரத்தில் வைத்திருப்பது, ஒருவரது தலையாய கடமையாகும். 17. மனம், தவறான செயல்களின் பின் தறிகெட்டு ஓடுகிறது. அவ்வாறு ஓட விடாமல், அந்த நேரத்தில் இறைநாமத்தை நினைவுகூறவோ அல்லது ஏதாவது நல்ல செயல்களைச் செய்யவோ முற்படுங்கள். இவ்வாறு செய்பவர்கள் கண்டிப்பாக இறையருளுக்குப் பாத்திரமாவார்கள். 18. முதலில், பிறரது வளமையைக் கண்டு பொறுமை இழந்து அவர்களுக்குத் தீங்கு இழைக்க விரும்பும் மனப்பாங்கினை விட்டு விடுங்கள். மற்றவர்கள் சந்தோஷமாக இருப்பதைக் கண்டு மனம் மகிழுங்கள். துன்பத்தில் இருப்பவர்களிடம் அனுதாபம் காட்டி, அவர்கள் செழிப்படைய வேண்டும் என்று ஆசைப்படுங்கள். அதுவே இறைவனிடம் ப்ரேமை வளர்த்துக் கொள்வதற்கு வழியாகும். 19. பொறுமையே ஒருவருக்குத் தேவையான அனைத்து சக்தியுமாகும். 20. ஆனந்தமாக வாழ விழைபவர்கள், எப்போதும் நல்லவற்றையே செய்து கொண்டு இருக்க வேண்டும். (ஸந்தேஹ நிவாரிணி, அத்தியாயம் 7)
கோபமும், பொறாமையும், மனிதகுலத்தின் மிகவும் அச்சுறுத்தக்கூடிய எதிரிகளாகும். அவை, ஒற்றுமை மற்றும் சகிப்புத்தன்மை உணர்வுகளை அழித்து விடுகின்றன. - பாபா