azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 05 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 05 Jul 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

From the 46 maxims of conduct: 10. Truth is the all-protecting God. There is no mightier guardian than truth. 11. The Lord, who is the embodiment of truth (Satya), grants His vision (darshan) to those of truthful speech and loving heart. 12. Have undiminished kindness toward all beings and also the spirit of self-sacrifice. 13. You must possess control of the senses, an unruffled character, and non-attachment. 14. Be always on the alert against the four sins that the tongue is prone to commit: (1) speaking falsehood, (2) speaking ill of others, (3) back-biting, and (4) talking too much. It is best to attempt to control these tendencies. 15. Try to prevent the five sins that the body commits: killing, adultery, theft, drinking intoxicants, and the eating of flesh. It is a great help for the highest life if these are kept as far away as possible. ( Sandeha Nivaarani, ch.7)
YOU HAVE TO BE EVER VIGILANT IN THE USE OF THE TONGUE. IT CAN BE THE MEANS OF LIBERATION OR BONDAGE. – BABA
46 நன்னெறிக் கோட்பாடுகளிலிருந்து: 10. சத்தியமே அனைத்தையும் காக்கும் கடவுளாகும். சத்தியத்தை விட ஆற்றல் மிக்க பாதுகாவலன் வேறெதுவும் இல்லை. 11. சத்தியத்தின் திருவுருவமான இறைவன், சத்தியமான பேச்சும், ப்ரேமை நிறைந்த இதயமும் கொண்டவர்களுக்கு தனது தரிசனத்தை அளிக்கிறான். 12. அனைத்து உயிரினங்களிடம் குறையாத கனிவும், மேலும், தியாக உணர்வையும் கொண்டிருங்கள்.13. உங்களுக்கு புலனடக்கமும், நிலைகுலையாத குணநலனும், பற்றின்மையும் இருக்க வேண்டும். 14. நாக்கு செய்யக்கூடிய நான்கு பாவங்களுக்கு எதிராக எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள்: 1) பொய் பேசுவது 2) பிறரைப் பற்றி அவதூறாகப் பேசுவது 3) புறங்கூறுவது 4) அளவுக்கு மீறி பேசுவது. இந்த மனப்பாங்குகளைக் கட்டுப்படுத்த முயல்வது சாலச் சிறந்தது. 15. உடல் செய்யும் ஐந்து பாவங்களைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்: கொல்லுதல், விபச்சாரம், களவு, மது அருந்துதல், புலால் உண்ணுதல். உன்னதமான வாழ்க்கை வாழ, எவ்வளவு தூரம் இவற்றை விலக்கி வைக்கிறோமோ அவ்வளவு மேலான உதவியாக இருக்கும். (ஸந்தேஹ நிவாரிணி, அத்தியாயம் 7)
நாக்கைப் பயன்படுத்துவதில் நீங்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில் அது மோக்ஷத்திற்கோ அல்லது பந்தத்திற்கோ வழிவகுக்கக் கூடும். - பாபா