azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 27 Jun 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 27 Jun 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

The spirit of sacrifice is the basic equipment of the sevak (one who takes up service). Without the inspiration of the sense of sacrifice, your seva (service) will be a hypocrisy, a hollow ritual. Inscribe this on your heart. Inscribe it deep and clear. There are four modes of writing, dependent on the material on which the text is inscribed. The first is writing on water; it is washed out even while the finger moves. The next is, writing on sand. It is legible, until the wind blows it into mere flatness. The third is, the inscription on rocks; it lasts for centuries, but it too is corroded by the claws of Time. The inscription on steel can withstand the wasting touch of Time. Have this axiom inscribed on your heart - "Serving others is meritorious, harming others or remaining unaffected and idle while others suffer, is sin." (Divine Discourse June 26,1969)
SERVICE SPRINGS OUT OF LOVE AND IT SCATTERS LOVE IN PROFUSION. - BABA.
தியாக உணர்வே சேவகனின் (சேவை செய்பவனுக்கு) அடிப்படைத் தேவையாகும். தியாக உணர்வின் உத்வேகம் இன்றி, உங்களது சேவை போலித்தனமாகவும், வெற்றுச் சடங்காகவும் தான் இருக்கும். இதை உங்களுடைய இதயத்தில் பதிந்து கொள்ளுங்கள். அதை ஆழமாகவும், தெளிவாகவும் பொறித்துக் கொள்ளுங்கள். எந்தப் பொருளின் மீது எழுதுகிறோம் என்பதைப் பொறுத்து நான்கு விதமாக எழுதும் முறைகளை வகைப்படுத்தலாம். முதலாவது, தண்ணீரில் எழுதுவது; அது விரல் நகரும்போதே கூட அழிந்து விடும். அடுத்தது, மணலில் எழுதுவது; இந்த முறை தெளிவாக இருப்பினும் காற்றடிக்கும் போது கலைந்துவிடும். மூன்றாவது, பாறைகளில் செதுக்கி வைப்பது; அது பல நூற்றாண்டுகள் நீடித்திருக்கும்; ஆனால் அதுவும் கூட காலப்போக்கில் சிதைந்து விடுகிறது. இரும்பின் மீது பொறிக்கப்படுவது, காலத்தினால் ஏற்படும் சிதைவைத் தாங்கி நிற்க முடியும். எப்படி எழுதினாலும், கீழ்க்கண்ட பொன்மொழியை உங்கள் இதயத்தில் பதித்துக் கொள்ளுங்கள்: “பிறருக்கு சேவை செய்வதே புண்ணியம்; பிறருக்கு தீங்கிழைப்பதும் அல்லது பிறர் துன்பப்படும்போது கவலையின்றி சும்மா இருப்பதும் பாவம்” (தெய்வீக அருளுரை, ஜூன் 26, 1969)
ப்ரேமையிலிருந்து வெளித்தோன்றும் சேவை, ப்ரேமையை அபரிதமாகப் பரவச்செய்கின்றது. - பாபா