azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 22 Jun 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 22 Jun 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

The human body is prey to many ailments. Man regards all of them as bodily ailments. But not all are entirely related to the body. Bodily ailments can be treated by medicines. But most ailments in the world today have their origin in the mind. Aberrations of the mind trigger reactions in the body and cause various diseases. The main cause of many ailments is rooted in the mind. Mind and body are interrelated. The influence of mind on the body is of a negative character. This negativity is antagonistic to the experience of bliss. Bad thoughts and bad feelings arise in the mind. At the same time, there are good thoughts and good feelings too. It is only when bad thoughts and feelings are weeded out, you can have good health. Many diseases have their origin in thoughts that fill the mind. Bad thoughts cause indigestion, affect the heart, and bring variations in blood pressure! Worries are the cause of many mental diseases. Diabetes and pulmonary diseases are traceable to mental causes.(Divine Discourse, Feb 25, 1998.)
TO GET RID OF ILLNESS AND TO LEAD A CALM AND HEALTHY LIFE, MAN HAS TO CULTIVATE MENTAL PEACE. – BABA
மனித உடல் பலவிதமான நோய்களுக்கு இரையாகின்றது. இவை அனைத்தையும் உடல்சார்ந்த நோய்கள் என மனிதன் கருதுகிறான். ஆனால், இவை அனைத்தும் முழுமையாக உடல் சம்பந்தப்பட்டவை அல்ல. உடல்சார்ந்த நோய்களுக்கு மருந்துகளின் மூலம் சிகிச்சை அளிக்க முடியும். ஆனால், உலகில் பெரும்பாலான நோய்களுக்கு மனமே மூலகாரணம். மனதின் விகாரங்கள், உடலில் எதிர்வினைகளைத் தூண்டி, பல்வேறு நோய்களை உருவாக்குகின்றன. பல நோய்களுக்கான முக்கிய காரணம் மனதில் வேரூன்றி உள்ளது. மனமும், உடலும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டவை. உடலின் மீதான மனதின் பாதிப்பு, ஒரு எதிர்மறையான குணம் படைத்தது. இந்த எதிர்மறை குணம், ஆனந்தத்தை அனுபவிப்பதற்கு தடையாக விளங்குகிறது. தீய சிந்தனைகளும், தீய உணர்வுகளும் மனதில் எழுகின்றன. அதே சமயத்தில் அங்கு நற்சிந்தனைகளும், நல்உணர்வுகளும் கூட இருக்கின்றன. தீய சிந்தனைகளையும், தீய உணர்வுகளையும் களைந்தால் மட்டுமே, நீங்கள் நல்ல உடல்நலத்தை பெற முடியும். தீய சிந்தனைகள் அஜீரணத்தை உருவாக்கி, இதயத்தை பாதித்து, ரத்த அழுத்தத்தில் மாற்றங்களை உருவாக்குகின்றன. கவலைகளே பலவிதமான மனநோய்களுக்கு காரணம். நீரிழிவு மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் மனோரீதியான காரணங்களினால் ஏற்படுகின்றன (தெய்வீக அருளுரை, பிப்ரவரி 25, 1998)
நோயிலிருந்து விடுபடுவதற்கும், அமைதியாக, ஆரோக்கியமாக வாழ்வதற்கும், மனிதன் மனச்சாந்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும். - பாபா