azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 14 Jun 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 14 Jun 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

We must investigate what is meant by ‘I’. When I ask your name you say, “Ramanna, Lakshmayya, Venkanna, Krishnamurthy," etc. When you are asked who this Ramanna or Lakshmayya is, you raise your hands and say, 'I, I." I ask a number of people and use a number of names, but the answer is always 'I'. Where does this 'I' come from? It is found in everyone. Has this 'I' got a form? Is it this body or mind or intellect or consciousness? It is not any of these. The 'I' is not this body. When I say My kerchief I imply that I am different from the kerchief. I say My table or My chair, because I am not the table or the chair. Now, if we have this 'I' in everyone, it must be the same in everyone. It is the One among the many. 1 + 1 + 1 + 1 is equal to 4. But I + I + I + I is equal to only 'I' for, the 'I' is, the same in everyone. To recognise this is to truly know one's real identity, the One, the Atman. Without this knowledge, life is a waste. (Divine Discourse, Jul 25, 1978)
THE ATMA DOES NOT DIE; ONLY THE BODY DIES. WHEN MAN KNOWS THIS, DEATH LOSES ITS STING, DEATH IS NOT FEARED, IT IS BUT A WELCOME VOYAGE INTO THE KNOWN HARBOUR. - BABA.
"நான்" என்பதன் அர்த்தம் என்ன என்பதை நாம் ஆராய வேண்டும். நான் உங்களுடைய பெயரைக் கேட்டால் நீங்கள், "ராமண்ணா, லட்சுமணய்யா, வெங்கண்ணா, கிருஷ்ணமூர்த்தி" என்றெல்லாம் கூறுகிறீர்கள். யார் இந்த ராமண்ணா அல்லது லட்சுமணய்யா என்று கேட்டால், நீங்கள் உங்கள் கைகளை உயர்த்தி, "நான்", "நான்" என்று சொல்கிறீர்கள். நான் பல மனிதர்களை, பல பெயர்களைப் பயன்படுத்திக் கேட்கிறேன், ஆனால் பதில் எப்போதுமே, "நான்" தான். இந்த "நான்" எங்கிருந்து வருகிறது? இதை ஒவ்வொருவரிலும் காண முடிகிறது. இந்த "நான்" என்பதற்கு ஒரு ரூபம் இருக்கிறதா? இது உடலா, மனமா, புத்தியா அல்லது உள்ளுணர்வா? இவற்றில் எதுவும் இல்லை. "நான்" என்பது இந்த உடல் அல்ல. என்னுடைய கைக்குட்டை என்று நான் சொல்லும்போது, நான் கைக்குட்டையிலிருந்து வேறானவன் என்று ஆகிறது. என்னுடைய மேஜை, என்னுடைய நாற்காலி என்று நான் சொல்கிறேன், ஏனென்றால் நான் மேஜையும் அல்ல அல்லது நாற்காலியும் அல்ல. இந்த "நான்" ஒவ்வொருவரிலும் இருக்குமானால், அது அனைவரிலும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். பலவற்றில் ஒன்றாக இருப்பது அதுவே. 1+1+1+1 என்று கூட்டினால் அது 4க்கு சமம். ஆனால், நான்+நான்+நான்+நான் என்று பார்த்தால் அது "நான்" மட்டுமே, ஏனெனில் இந்த "நான்" அனைவரிலும் ஒன்றே. ஒருவரது உண்மையான அடையாளம் ஆத்மா என்ற அந்த ஒன்றே என்பதைத் தெரிந்து கொள்வதே இதை உண்மையில் உணருவதாகும். இந்த அறிவு இல்லை என்றால் வாழ்க்கை வீணே. (தெய்வீக அருளுரை ஜூலை 25, 1978)
ஆத்மா இறப்பதில்லை; உடல் மட்டுமே இறக்கிறது. மனிதன் இதைத் தெரிந்து கொண்டு விட்டால், மரணம் வலுவிழந்து விடுகிறது; மரணம் அஞ்சப்படுவதில்லை; அது நன்கு அறிந்த பாதுகாப்பான இடத்திற்கு செல்வதற்கான வரவேற்கத்தக்க பயணம் அன்றி வேறில்லை. - பாபா