azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 29 May 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 29 May 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Practice the attitude of offering every act at the feet of God as a flower is offered in worship. Make every breath an offering to Him. Do not get upset by calamities; take them as acts of Grace. If a man loses his hand in an accident, he must believe that it was the Lord's Grace that saved his life. When you know that nothing happens without His resolve (Sankalpa), everything that happens has a value added to it. You may be neglecting a creeper in your backyard, but if a sage who passes by it says that it is a rare drug that can cure snake poison, you erect a fence around it, and do not allow children to pluck its leaves even for fun! When you know that the Lord is the cause and the source of all, you deal with everyone in a humble and reverent manner. That is the path which will lead you quickly to the Goal! (Divine Discourse, Feb 20, 1966.)
DO ALL THE TASKS AS OFFERINGS TO GOD; DO NOT CLASSIFY SOME
AS ‘MY WORK’ AND SOME AS ‘HIS’ WORK. - BABA.
இறை வழிபாட்டில் மலரை அர்ப்பணிப்பதைப் போல, ஒவ்வொரு செயலையும் இறைவனது திருப்பாதத்தில் அர்ப்பணிக்கும் மனப்பாங்கினை கடைப்பிடியுங்கள். ஒவ்வொரு மூச்சையும் இறைவனுக்கான அர்ப்பணமாக ஆக்குங்கள். பேரிடர்களால் மனம் தளராதீர்கள். அவற்றை இறைவனின் அருளாகக் கருதுங்கள். ஒரு மனிதன் விபத்தில் தன் கையை இழந்து விட்டால், இறைவனின் அருளே தனது உயிரைக் காப்பாற்றியது என்ற நம்ப வேண்டும். இறைவனின் சங்கல்பம் இன்றி எதுவுமே நடப்பதில்லை என்பதை நீங்கள் உணரும் போது, நிகழும் ஒவ்வொரு செயலிற்கும் மதிப்பு கூடுகிறது. உங்கள் புழக்கடையில் இருக்கும் ஒரு கொடியை நீங்கள் துச்சமாக நினைக்கலாம்; ஆனால் அந்த வழியாக வரும் ஒரு சாது, அது பாம்பின் விஷத்தை முறிக்கவல்ல ஒரு அரிய மூலிகை என்று சொல்லி விட்டால், நீங்கள் அதைச் சுற்றி ஒரு வேலி அமைத்து, சிறுவர்கள் விளையாட்டுக்குக்கூட அதன் இலைகளைப் பறிப்பதை அனுமதிக்க மாட்டீர்கள்! இறைவனே அனைத்திற்கும் காரணமும், ஆதாரமும் ஆவான் என்று அறியும் போது, நீங்கள் அனைவருடனும் பணிவாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்வீர்கள். அந்தப் பாதையே உங்களை விரைவாக இலக்கிற்கு இட்டுச் செல்லும்! (தெய்வீக அருளுரை, பிப்ரவரி 20,1966)
அனைத்து செயல்களையும் இறையார்ப்பணமாகச் செய்யுங்கள்; சிலவற்றை "என்னுடைய பணி" என்றும், சிலவற்றை "இறைவனுடைய பணி" என்றும் பாகுபடுத்திப் பார்க்காதீர்கள். - பாபா