azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 28 May 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 28 May 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

This is a blank paper. If you pack vegetables in it, it will acquire the smell of vegetables. If you pack fruits like plantain in it, it will acquire the smell of plantain. If you pack dry fish in it, it will emit the smell of dry fish. The paper has no smell of its own; it absorbs the smell of the substance that you pack in it. Man by nature is pure and sacred. But he acquires evil qualities by associating himself with bad company. It is said, “Tell me your company, I shall tell you what you are”. If you tell what type of people you are associated with, I can tell you the type of person you are. It is therefore necessary that you associate yourself with good people in all your activities. It is the company that makes you good or bad. Therefore, keep away from bad company. Join the company of those who have a pure heart and sacred feelings. (Divine Discourse, May 21, 2006.)
CONSTANT ASSOCIATION IN GOOD COMPANY WILL PROMOTE THE FEELING OF DETACHMENT. – BABA
இது ஒரு வெற்றுக் காகிதம். இதில் நீங்கள் காய்கறிகளைச் சுற்றி வைத்தால், அது காய்கறிகளின் வாசனையைப் பெறும். அதில் வாழைப்பழத்தைப் போன்ற பழங்களைச் சுற்றி வைத்தால், அது வாழைப்பழத்தின் வாசனையைப் பெறுகிறது. அதில் கருவாட்டைச் சுற்றி வைத்தால், அதிலிருந்து கருவாட்டு வாசனை தான் வரும். அந்தக் காகிதத்திற்கு என்று தனி வாசம் ஏதும் இல்லை; நீங்கள் அதில் சுற்றி வைக்கும் பொருளின் வாசனையை அது கிரகித்துக் கொள்கிறது. அவ்வண்ணமே மனிதன் இயற்கையில் பரிசுத்தமானவன், புனிதமானவன். ஆனால் அவன் தீயவர்களின் சேர்க்கையால், தீய குணங்களைப் பெறுகிறான். "உன் நண்பன் யார் என்று சொல், நீ எப்படிப்பட்டவன் என்று நான் சொல்கிறேன்" என்று சொல்லப்படுகிறது. யாரோடு நீங்கள் பழகுகிறீர்கள் என கூறினால் நீங்கள் எப்படிப்பட்டவர் என்று என்னால் கூற முடியும். எனவே உங்களுடைய அனைத்து பணிகளிலும், நீங்கள் உங்களை நல்லவர்களோடு இணைத்துக் கொள்வது அவசியம். உங்கள் சேர்க்கை தான் உங்களை நல்லவராகவோ அல்லது தீயவராகவோ ஆக்குகிறது. எனவே, தீயவர்களின் சேர்க்கையிலிருந்து விலகி இருங்கள். பரிசுத்தமான இதயம் மற்றும் புனிதமான உணர்வு கொண்டோரிடம் இணைந்து இருங்கள். (தெய்வீக அருளுரை, மே 21,2006)
நல்லோரிடம் என்றும் சேர்ந்திருப்பது பற்றற்ற உணர்வை மேம்படுத்தும். – பாபா