azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 22 May 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 22 May 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Vedas declare, Aham Brahmasmi and Tat Twam Asi. These two Vedic declarations state: “I and Brahman”, and “That Thou Art”. True wisdom lies in seeing oneness. Experience of non-dualism is true wisdom (Advaita darshanam jnanam). It is a sign of ignorance to see duality ignoring the underlying unity. Duality is not the truth. In this manner, Buddha enquired deeply and ultimately got the experience of “I am I”. That is true realisation. You may do penance for many years, you may do meditation and perform many yogic practices. But all these spiritual practices give only temporary satisfaction, not everlasting bliss. Some people talk about meditation. Even Buddha advocated the practice of meditation. What is that you have to meditate upon? What is meant by meditation? Does it mean concentrating upon a particular object? No! That’s not meditation. To contemplate upon the principle of ‘I am I’ is true meditation. (Divine Discourse, May 13, 2006)
SO LONG AS YOU HAVE THE DUALISTIC FEELING OF ‘YOU AND I’, YOU CANNOT EXPERIENCE UNITY. -BABA.
வேதங்கள், ‘அஹம் ப்ரஹ்மாஸ்மி’ மற்றும் ‘தத் த்வம் அஸி’ அதாவது, "நானே பிரம்மன்" மேலும் " நானும் அதுவும் ஒன்று" என முழங்குகின்றன. ஒருமையைக் காண்பதில் தான் உண்மையான ஞானம் இருக்கிறது. ‘அத்வைத தரிசனம் ஞானம்’ அதாவது ஏகத்துவத்தை உணர்வதே உண்மையான ஞானம். அடிப்படையில் இருக்கும் ஒருமையை உதாசீனப்படுத்தி, இருமையைக் காண்பது அறியாமையின் அறிகுறியே. இருநிலை அதாவது த்வைதபாவம் உண்மையல்ல. இவ்வாறாக புத்தர் ஆழ்ந்து ஆராய்ந்து, இறுதியில் "நான் நானே" என்ற அனுபவத்தைப் பெற்றார். இதுவே உண்மையான மெய்யுணர்தல். நீங்கள் பல வருடங்கள் தவம் செய்யலாம், தியானம் மற்றும் பல யோகப் பயிற்சிகளைச் செய்யலாம். ஆனால் இந்த ஆன்மிகப் பயிற்சிகள் அனைத்தும் தற்காலிக திருப்தியை அளிக்குமே அன்றி நிரந்தரமான ஆனந்தத்தை அளிக்காது. சிலர் தியானத்தைப் பற்றிப் பேசுகின்றனர். புத்தரும் கூட தியானம் செய்வதை முன்னிறுத்தினார். நீங்கள் எதைக் குறித்து தியானம் செய்ய வேண்டும்? தியானம் என்றால் என்ன? ஏதாவது ஒரு பொருள் மீது மனதை ஒருமுகப்படுத்துவது என்பதா? இல்லை! அது தியானம் அல்ல. "நான் நானே" எனும் தத்துவத்தின் மீது தியானிப்பதே உண்மையான தியானம். (தெய்வீக அருளுரை, மே 13, 2006).
"நீ மற்றும் நான்" என்ற இருமை உணர்வு உங்களுக்கு இருக்கும் வரை, ஒற்றுமையை நீங்கள் அனுபவிக்க முடியாது. - பாபா