azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 18 May 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 18 May 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Whether the people whom you serve thank you or traduce you, you must gladly do the task allotted to you. For, you are serving yourselves, not them, remember. Bouquets or brickbats, receive them with equal calm. It is only those who identify themselves with the body who are exalted or pained; you must feel that you are the dehi, not the deha (the self, not the body) - that will give you the strength to serve best. While doing your work, do not argue that this particular bit is your jurisdiction and that other one is not; do not be sticklers for boundaries and limits. Support each other, supplement each other in joyful co-operation and strengthen each other. Act as an ideal satsanga (spiritual gathering), infusing into each other energy and enthusiasm. That does not mean that you should carry a greater burden than that allotted to you. Do not interfere wildly with what other people are doing or criticise others sullenly! (Divine Discourse, Feb 24, 1965)
WORK HARD AND, MORE IMPORTANT STILL, WORK TOGETHER WITH OTHERS IN LOVING KINSHIP- BABA.
நீங்கள் சேவை செய்யும் மனிதர்கள் உங்களை போற்றினாலும் தூற்றினாலும் உங்களுக்கு கொடுக்கப்பட்ட கடமைகளை இன்முகத்துடன் செய்ய வேண்டும். ஏனெனில், உங்களுக்கே தான் நீங்கள் சேவை செய்து கொள்ளுகிறீர்கள், அவர்களுக்கு அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். புகழ்ச்சியோ அல்லது இகழ்ச்சியோ இரண்டையும் சமநிலையோடு ஏற்றுக் கொள்ளுங்கள். உடல் என்று தன்னை நினைப்பவர்கள் தான் இன்பப்படவோ அல்லது துன்பப்படவோ செய்வார்கள்; நீங்கள் “தேகம்” அல்ல “தேஹி” (உடல் அல்ல, உள்ளுறையும் ஆத்மா) என்று உணருங்கள்- அதுவே திறம்பட சேவை செய்வதற்கான சக்தியை உங்களுக்கு அளிக்கும். நீங்கள் சேவை ஆற்றும்போது “உங்கள் அதிகார வரம்புக்குட்பட்டு இது உனக்கான பணி, மற்றவை அல்ல” என வாதிடாதீர்கள். வரம்புகள் மற்றும் எல்லைகளைப் பற்றிப் பிடிவாதமாக இருக்காதீர்கள். ஒருவருக்கு ஒருவர் துணையாகவும், ஒருவருக்கு ஒருவர் சந்தோஷமாக கூட்டுறவாகவும், ஒருவருக்கு ஒருவர் வலிமையூட்டுபவர்களாகவும் இருங்கள். ஒருவருக்கு ஒருவர் சக்தி மற்றும் உற்சாகத்தை ஊட்டி, ஒரு இலட்சிய ஸத்ஸங்கமாக (ஆன்மிக நட்புவட்டம்) நடந்து கொள்ளுங்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்டதை விட அதிகமான சுமையை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது அதன் பொருளல்ல. மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் அதிகமாகத் தலையிடாமலும் அல்லது பிறரை எள்ளி நகையாடாமலும் இருங்கள்! (தெய்வீக அருளுரை, பிப்ரவரி 24,1965)
கடுமையாக உழையுங்கள்; அத்துடன், முக்கியமாக, மற்றவர்களுடன்
நேசமான உறவுடன் ஒன்று சேர்ந்து பணியாற்றுங்கள். - பாபா