azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 15 May 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 15 May 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

You probably think that, since people from all parts of India, even from countries outside India, pass through your town (Penukonda) in continuous flood towards Prasanthi Nilayam at Puttaparthi, they must be pouring their contributions into the coffers of the Nilayam. Let Me declare the truth to you - I do not take anything from anyone, except their love and devotion. For the last 29 years, this has been My consistent practice. The people who come there are giving Me just the wealth that you have all given Me today, the wealth of Faith, Devotion and Love, that is all. To understand any one, you must be with them and near them; you must approach them, not with hatred or anger, but in friendship and love. So too in My case. How can you know Me, if you do not come near Me and unto Me? ( Divine Discourse, Feb 20, 1965)
OUR GOOD CONDUCT IS OUR TRUE WEALTH. -BABA.
இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும், ஏன் வெளிநாடுகளிலிருந்தும் கூட புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்திற்கு தொடர் வெள்ளம் போல உங்கள் நகரம் (பெனுகொண்டா) வழியாக மக்கள் வருவதால், அவர்கள் நிலையத்தின் உண்டியல்களில் தங்களது காணிக்கைகளைக் கொட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கக் கூடும். உங்களுக்கு ஒரு உண்மையை நான் அறிவிக்கிறேன் - அவர்களது ப்ரேமை மற்றும் பக்தியைத் தவிர நான் எவரிடமிருந்தும் வேறு எதையும் ஏற்றுக் கொள்வதில்லை. கடந்த 29 ஆண்டுகளாக இதுதான் எனது நிலையான நடைமுறையாக இருக்கிறது. நீங்கள் எல்லோரும் இன்று எனக்கு அளித்த நம்பிக்கை, பக்தி மற்றும் ப்ரேமை எனும் செல்வத்தைத்தான் அங்கு வருபவர்களும் எனக்கு அளிக்கிறார்கள், அவ்வளவு தான். யாரையாவது புரிந்துகொள்ள வேண்டுமானால், நீங்கள் அவர்களுடன் அவர் அருகில் இருக்க வேண்டும்; நீங்கள் அவர்களை வெறுப்பு அல்லது கோபம் இன்றி, நட்பு மற்றும் ப்ரேமையோடு அணுக வேண்டும். என்னுடைய விஷயமும் அவ்வாறுதான். என்னருகிலும், என்னிடமும் வராமல், நீங்கள் என்னை எப்படித் தெரிந்து கொள்ள முடியும்? (தெய்வீக அருளுரை, பிப்ரவரி 20,1965)
நன்னடத்தையே நமது உண்மையான செல்வம். - பாபா