azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 14 May 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 14 May 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Man is enclosed in five sheaths: the physical, vital, mental, intellectual and blissful; the last, blissful is the core. So, man need only explore within himself for infinite bliss. Bliss has to be sought not through accumulation but through sacrifice and promotion of the welfare of others. Sacrifice (Tyaga) is recommended by the Vedas as the only path to immortality. Give in plenty, give gladly, give for the glory of God, and in gratitude to God. Selfishness is the canker that destroys charity. Though one is aware that a step is wrong, selfishness does not allow him to desist. But it can be overcome by steady determination. Share with others the knowledge and skills you have earned, the ideas and ideals you have benefited from, and the joy you have won by discipline and dedication. Sharing will not diminish them or devalue them. On the other hand, they will shine better with added splendour. (Divine Discourse, Apr 21, 1983)
HANDS ARE GIVEN TO US SO THAT WE MAY PERFORM GOOD ACTS AND
OFFER THE FLOWER OF SERVICE TO THE LORD. - BABA
அன்னமயம், ப்ராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம் மற்றும் ஆனந்தமயம் ஆகிய ஐந்து கோசங்களுக்குள் மனிதன் அடைக்கப்பட்டுள்ளான்; கடைசியாக உள்ள ஆனந்தமய கோசமே உட்கருவாகும். எனவே, அளவற்ற ஆனந்தத்தை மனிதன் அவனுக்குள்ளேயே தான் தேட வேண்டும். தனக்கென்று (செல்வத்தை) குவித்துக்கொள்ளாமல், தியாகம் மற்றும் பிறரது நலனை ஊக்குவிப்பதன் மூலமே, ஆனந்தத்தை நாட வேண்டும். தியாகமே அமரத்துவத்திற்கான ஒரே பாதை என வேதங்கள் பரிந்துரைக்கின்றன. அள்ளிக் கொடுங்கள், ஆனந்தமாகக் கொடுங்கள், இறைவனின் மாட்சிமைக்காகக் கொடுங்கள், மேலும் இறைவன் மீதுள்ள நன்றி உணர்வோடு கொடுங்கள். சுயநலம், தானதர்மத்தை அழிக்கும் புற்றுநோயாகும். ஒரு செயல் தவறு என்று ஒருவன் அறிந்திருந்தாலும், அதைத் தவிர்ப்பதற்கு சுயநலம் அவனை அனுமதிப்பதில்லை. ஆனால், இதை நிலையான மனஉறுதியால் வென்றிட முடியும். நீங்கள் ஈட்டிய அறிவு மற்றும் ஆற்றல்களை, நீங்கள் பயனடைந்த கருத்துக்கள் மற்றும் இலட்சியங்களை, மேலும் ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் நீங்கள் பெற்ற ஆனந்தத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். பகிர்ந்து கொள்வதால் அதன் அளவிலோ, மதிப்பிலோ குறைவு ஏற்படாது. மாறாக, அவை கூடுதல் பிரகாசத்துடன் சிறப்பாக ஒளிரும். (தெய்வீக அருளுரை, ஏப்ரல் 21,1983)
நற்செயல்களைப் புரிவதற்கும், சேவை எனும் மலரினை இறைவனுக்கு அர்ப்பணம் செய்வதற்கும் தான் நமக்கு கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. - பாபா