azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 07 May 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 07 May 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Consider all as your brothers and sisters; you need not share your property with them, however, whomsoever you come across, talk to them nicely and love them wholeheartedly. God is the embodiment of love. He protects entire mankind by His love. If only there is love in you, that’s enough. Then all of you will become united. You should not create distance between one another by your talk or conduct. Draw everybody close to you with love. Then all of you will attain proximity of God. When you look at others with love, God will also look at you with love. In whatever situation you may be, never show anger, jealousy, hypocrisy or pomp. Do not treat others with anger or hatred. By experiencing your love, love in others will also increase. When you treat others with love, they will also shower love towards you. On the other hand, if you show anger towards them, they will also behave angrily with you! ( Divine Discourse, Jan 27, 2007.)
A PEACEFUL MIND IS THE ABODE OF LOVE. - BABA.
அனைவரையும் உங்களுடைய சகோதர, சகோதரிகளாகக் கருதுங்கள்; நீங்கள் உங்கள் சொத்தை அவர்களுக்கு பகிர்ந்தளிக்கத் தேவையில்லை; மாறாக, நீங்கள் யாரை சந்தித்தாலும் அவர்களுடன் இனிமையாக பேசி, அவர்களை முழு மனதுடன் நேசியுங்கள். இறைவன் ப்ரேமையின் திருவுருவம். அவன் மனிதகுலம் அனைத்தையும் அவனது ப்ரேமையினால் காத்து இரக்ஷிக்கிறான். உங்களுள் ப்ரேமை ஒன்று மட்டும் இருந்தால், அதுவே போதுமானது. அப்போது நீங்கள் அனைவருமே அன்பினால் இணைந்து விடுவீர்கள். உங்கள் வார்த்தையாலோ நடத்தையாலோ சகமனிதர்களிடையே இடைவெளியை உண்டாக்காதீர்கள். உங்களுடைய ப்ரேமையின் மூலம் ஒவ்வொருவரையும் உங்களருகில் அரவணைத்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் அனைவரும் இறைவனின் அருகாமையைப் பெறுவீர்கள். நீங்கள் பிறரை ப்ரேமையுடன் நோக்கினால், இறைவனும் கூட உங்களை ப்ரேமையுடன் நோக்குவான். எப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் இருந்தாலும், கோபம், பொறாமை, போலித்தனம் அல்லது படாடோபத்தை ஒருபோதும் வெளிக்காட்டாதீர்கள். மற்றவர்களை கோபம் அல்லது வெறுப்புடன் நடத்தாதீர்கள். உங்களுடைய ப்ரேமையை அனுபவிப்பதன் மூலம் மற்றவர்களுக்குள் உள்ள ப்ரேமையும் பெருகும். மற்றவர்களை நீங்கள் ப்ரேமையுடன் நடத்தினால், அவர்களும் உங்கள் மீது ப்ரேமையைப் பொழிவார்கள். மாறாக, நீங்கள் அவர்களிடம் கோபத்தைக் காட்டினால், அவர்களும் உங்களிடம் கோபமாகவே நடந்து கொள்வார்கள்! (தெய்வீக அருளுரை, ஜனவரி 27, 2007)
ஒரு அமைதியான மனமே அன்பின் இருப்பிடம் ஆகும். – பாபா