azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 05 May 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 05 May 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Every man is prone to commit mistakes either wittingly or unwittingly. But one mistake he should not commit in any circumstance, that is, to forget what he owes to his mother. The love of a mother can redeem a man's life, whatever his other lapses may be. The greatest gift of the parents is the body, with all its powers. Although the Lord rules over all lives, it is the parents who have endowed the body to the child. Clay and water are the gifts of Nature. But it is the potter who makes the pots out of them. Hence gratitude to the parents is a primary obligation. Students these days ask: "Why should we be grateful to our parents?" They should remember that if they cause distress to their parents now by their behaviour, they should not be surprised if in the later years their own children cause similar distress. This is the law of action and reaction that is always at work. (Divine Discourse, May 06, 1987.)
ONLY GRACE OF GOD CAN COOL THE HEATED BRAIN AND THE TROUBLED HEART. THAT GRACE WILL COME TO THOSE WHO ARE GRATEFUL TO THEIR PARENTS AND RENDER LOVING SERVICE TO THEM. - BABA.
ஒவ்வொரு மனிதனும் தெரிந்தோ, தெரியாமலோ தவறுகள் இழைக்கக் கூடும். ஆனால், அவன் எந்த சந்தர்ப்பத்திலும் இழைக்கக் கூடாத ஒரு தவறு என்னவென்றால், அவன் தனது தாய்க்கு என்ன கடமைப்பட்டு இருக்கிறான் என்பதை மறப்பது தான். அவனது மற்ற குறைகள் எதுவாக இருந்தாலும் ஒரு தாயின் அன்பு ஒரு மனிதனின் வாழ்க்கையை மீட்டு விட முடியும். பெற்றோர்களின் தலைசிறந்த பரிசு, அனைத்து சக்திகளையும் கொண்ட இந்த உடல் தான். இறைவனே அனைத்து உயிர்கள் மீதும் ஆட்சி செலுத்துகிறான் என்றாலும் கூட, பெற்றோர்களே குழந்தைக்கு உடலை அளித்தவர்கள். களிமண்ணும், தண்ணீரும் இயற்கையின் பரிசுகளே. ஆனால் குயவனே இவற்றிலிருந்து பானைகளை உருவாக்கியவன். எனவே பெற்றோர்களுக்கு நன்றி செலுத்துவதே ஒரு தலையாய கடமையாகும். இன்றைய மாணவர்கள், "நாங்கள் ஏன் பெற்றோர்களுக்கு கடமைப்பட்டு இருக்கவேண்டும்?" என்று கேட்கிறார்கள். இப்போது அவர்கள் தங்கள் நடத்தையின் மூலம் அவர்களுடைய பெற்றோர்களுக்கு துயரத்தை அளித்தால், பிற்காலத்தில் அவர்களது சொந்தக் குழந்தைகள் அதே போன்ற துயரத்தை அவர்களுக்கு ஏற்படுத்தும் போது, அதற்காக அவர்கள் ஆச்சரியப்படக் கூடாது. இதுவே எப்போதும் செயல்படும் வினை மற்றும் எதிர் வினையின் நியதி ஆகும். (தெய்வீக அருளுரை, மே 6,1987)
இறை அருள் மட்டுமே சூடேறிய மூளையையும், குழம்பியிருக்கும் இதயத்தையும் குளிர வைக்க முடியும். தங்களுடைய பெற்றோர்களுக்கு நன்றி உணர்வுடன் அன்பான சேவை ஆற்றுபவர்களுக்கே அந்த அருள் கிட்டும். - பாபா