azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 04 May 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 04 May 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

The world is one vast society. Every individual in it is part of this society, bound to it by the love that draws man to man, to be kith and kin. This love is there, deep in the heart of man. Only, it is unrecognised, ignored, doubted, denied, and argued away. It is the secret source of all sympathy and service; it creates the urge to live in and for society. It is the Vishwa-Prema (universal love), that flows from one spark of the Divine to all sparks. When the eyes shine illumined by the highest wisdom, Jnana, they see all as the One. Man realises that Sarvam Brahmamayam Jagat (all that is apparently changing, transforming and moving is pervaded by God). To have this One revealed as in All, one has to develop faith and discipline the mind. The mind has to shed its fancies and foibles; the Truth has to be known and experienced. (Divine Discourse, Feb 4, 1973.)
FAITH IS AN INDIVIDUAL ASSET; IT IS ACQUIRED AND PRESERVED BY ONE'S OWN EFFORT. - BABA.
இந்த உலகம் ஒரு பரந்து விரிந்த சமூகம். சொந்தம் கொண்டாடுவதற்காக ஒருவரை ஒருவர் ஈர்க்கும் ப்ரேமையினால் இச்சமூகத்திற்கு கட்டுண்டு, இதிலுள்ள ஒவ்வொரு தனி மனிதனும் இச்சமூகத்தின் அங்கம் ஆவான். இந்த ப்ரேமை ஒவ்வொருவரின் இதயத்தின் ஆழத்தில் இருக்கத்தான் செய்கிறது. அது, அறியப்படாமலும், தவிர்க்கப்பட்டும், சந்தேகிக்கப்பட்டும், மறுக்கப்பட்டும், விவாதிக்கப்பட்டும் இருக்கிறது. பரிவு மற்றும் சேவை உணர்வுகள் அனைத்திற்கும் இரகசியமான ஊற்றுக்கண் அதுவே; இச்சமூகத்திலும், இச்சமூகத்திற்காகவும் வாழ ஒரு தூண்டுதலை அது ஏற்படுத்துகிறது. இதுவே, ஒரு தெய்வீக தீப்பொறியிலிருந்து அனைத்து தீப்பொறிகளுக்கும் பாயும், பிரபஞ்சமயமான ப்ரேமை (விஸ்வ ப்ரேமை) ஆகும். ஞானத்தினால் ஒளியூட்டப்பட்ட கண்கள் பிரகாசிக்கும் போது, அவர்கள் அனைத்தையும் ஒன்றாகவே காண்கிறார்கள். பின்னர் ஒரு தனி மனிதன், ஸர்வம் ப்ரம்ம மயம் (மாறிக் கொண்டு இருப்பதைப் போலத் தோன்றும் இவ்வுலகத்தில், பரப்ரம்மமே அனைத்திலும் வியாபித்து இருக்கிறது) என்பதை உணர்கிறான். அனைத்திலும் இருப்பது இந்த ஒன்றே என்பது அறிய, ஒருவர் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, தனது மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். மனம் தனது உந்துதல்கள் மற்றும் குறைகளைக் களைய வேண்டும்; சத்தியத்தை அறிந்து கொண்டு அதை அனுபவிக்க வேண்டும். (தெய்வீக அருளுரை, பிப்ரவரி 4,1973)
இறை நம்பிக்கை என்பது ஒருவரது தனிப்பட்ட சொத்தாகும்; அது ஒருவருடைய சொந்த முயற்சியின் மூலமே பெறப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. - பாபா