azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 02 May 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 02 May 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Some people show great love for outsiders, but don’t show the same love towards their mother and father in their homes. First and foremost, we should love our parents and then other people. But we should not limit our love to our relatives and friends alone; we should love all. Only then God will shower His love on us. When we see somebody in trouble or an injured person on the road, we should not show indifference towards them. Howsoever urgent be the work we have, we should try to remove their suffering. Then God will manifest before us and fill us with energy. There is none in this world who can give us more love than God. We do bhajans and perform service activities only to attain love of God. God’s love fills us with great energy. It is only God who gives us this energy. Therefore, love God, and all people as all are verily the children of God. (Divine Discourse, Jan 27, 2007.)
YOU NEED NOT SHARE YOUR PROPERTY WITH ALL. WHOMSOEVER YOU COME ACROSS, TALK TO THEM NICELY AND LOVE THEM WHOLEHEARTEDLY. - BABA.
சில மனிதர்கள் வெளியாட்களிடம் அபரிமிதமான அன்பைக் காட்டுகிறார்கள், ஆனால் அதே அளவு அன்பை அவர்களுடைய வீடுகளில் இருக்கும் தாய், தந்தையரிடம் காட்டுவதில்லை. முதன்முதலில், நாம் நமது பெற்றோர்களை நேசிக்க வேண்டும்; பிறகுதான் மற்றவர்கள். ஆனால், நம்முடைய அன்பை நம் உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு மட்டுமே நிறுத்திக் கொள்ளக்கூடாது; நாம் அனைவரையும் நேசிக்க வேண்டும். அதன் பிறகே இறைவன் நம் மீது அவனது ப்ரேமையைப் பொழிவான். துன்பத்தில் இருப்பவரையோ அல்லது வீதியில் காயமடைந்தவரையோ கண்டால், நாம் அவர்களை உதாசீனப்படுத்தக் கூடாது. நம்முடைய பணி எவ்வளவு அவசரமானதாக இருந்தாலும், நாம் அவர்களது துன்பத்தை நீக்க முயலவேண்டும். பின்னர் இறைவன் நம் முன் தோன்றி நம்மை சக்தியால் நிரப்பி விடுவான். இந்த உலகில் இறைவனை விட அதிகமான ப்ரேமையை எவராலும் தர முடியாது. நாம் இறைவனது ப்ரேமையைப் பெறுவதற்காகவே பஜனைகளை செய்கிறோம், சேவைப் பணிகளை செய்கிறோம். இறைவனது ப்ரேமை நம்மை அபரிமிதமான சக்தியால் நிரப்புகிறது. இறைவன் மட்டுமே நமக்கு இந்த சக்தியை அளிக்கிறான். எனவே, இறைவனையும், அவனது குழந்தைகளான அனைத்து மனிதர்களையும் நேசியுங்கள். (தெய்வீக அருளுரை, ஜனவரி 27, 2007)
நீங்கள் உங்களுடைய சொத்தை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளத் தேவையில்லை. நீங்கள் யாரை சந்தித்தாலும் அவர்களுடன் அழகாகப் பேசி, அவர்களை முழு மனதுடன் நேசியுங்கள். - பாபா