azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 01 May 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 01 May 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Prayer for some benefit or gain should not be addressed to God. For, it means that God waits until He is asked! Surrender to Him; He will deal with you as He feels best and it would be the best for you. God does not dole out grace in proportion to the praise He receives! When you pray for a thing from God, you run the risk of condemning Him, if for some reason that prayer is not answered the way you wanted it to be, or as quickly as you wanted it to be. This contingency arises because you feel that God is an outsider, staying in heaven or some holy spot far away from you. God is in you, God is in every word, deed and thought of yours. Speak, do and think as befits Him. Do the duty that He has allotted to the best of your ability, and to the satisfaction of your conscience. That is the most rewarding puja (worship). (Divine Discourse, April 1973)
TO THE PERSON WHO HAS COMPLETELY SURRENDERED,
EVERYTHING THAT THEY EXPERIENCE (GOOD OR BAD) IS A GIFT FROM GOD. - BABA.
ஏதோ ஒரு பலன் அல்லது லாபத்திற்காக இறைவனைப் பிரார்த்திக்கக் கூடாது. ஏனெனில், அவனை நாம் வேண்டும் வரை இறைவன் காத்திருக்கிறான் என்று அர்த்தமாகி விடும்! அவனிடம் சரணடைந்து விடுங்கள்; அவன், எது மிகச் சிறந்தது எனக் கருதுகிறானோ அவ்வாறே உங்களைக் கையாளுவான்; அதுவே உங்களுக்கு மிகச் சிறந்ததுமாகும். இறைவன், தான் பெறும் புகழ்ச்சியின் விகிதத்திற்கு ஏற்ப அருளைப் பொழிவதில்லை! இறைவனிடம் ஒரு விஷயத்திற்காக நீங்கள் பிரார்த்திக்கும் போது, அந்த பிரார்த்தனை ஏதோ ஒரு காரணத்திற்காக நீங்கள் எதிர்பார்க்கும் விதத்திலோ அல்லது நீங்கள் விரும்பும் வேகத்திலோ நிறைவேறாமல் போனால், நீங்கள் இறைவனைப் பழிக்கும் அபாயத்திற்கு உள்ளாகலாம்! இந்தப் பிரச்சனை எழுவதற்குக் காரணம், இறைவனை, ஏதோ சொர்க்கத்தில் அல்லது புனித இடத்தில், உங்களிடமிருந்து வெகு தொலைவில் தங்கி இருக்கும் ஒரு அந்நியர் என்று நீங்கள் கருதுவதால் தான். இறைவன் உங்களுள், உங்களின் ஒவ்வொரு சொல், செயல் மற்றும் சிந்தனையில் இருக்கிறான். அவன் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் பேசுங்கள், செய்யுங்கள், சிந்தியுங்கள். உங்கள் முழுத்திறனையும் பயன்படுத்தி, உங்கள் மனச்சாட்சியின் திருப்திக்கு ஏற்றவாறு, அவன் உங்களுக்கு அளித்துள்ள கடமையை ஆற்றுங்கள். அதுவே மிகச்சிறந்த பலனளிக்கும் பூஜையாகும். (தெய்வீக அருளுரை, ஏப்ரல் 1973)
இறைவனிடம் பரிபூரண சரணாகதி அடைந்த ஒருவருக்கு, அனுபவிக்கும் அனைத்தும் (நல்லதோ அல்லது கெட்டதோ), இறைவனின் பரிசு ஆகும். - பாபா