azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 21 Apr 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 21 Apr 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

This day, the birth of Sri Rama is celebrated in all lands. Rama had His deed, word and thought, that is, body, speech and mind, ever pure and totally free from blemish. Really speaking, one ought to revere the story of Rama as a profound allegory. Every act and actor in that story attracts attention and gets imprinted on the memory because the allegory is personal to each of us. For example, consider Dasaratha. He represents the human body with the five senses of perception and the five sense-organs of action. He has three wives - the three Gunas or dispositions: Satwa, Rajas and Tamas - named Kausalya, Sumitra and Kaikeyi. He has four sons, who embody in themselves the four goals of human life - Dharma, Artha, Kama and Moksha. Rama is the very embodiment of Dharma (Morality, Virtue, Right conduct). The other three goals can be achieved only by steady adherence to Dharma. We find, therefore, the brothers Lakshmana, Bharatha and Shatrughna following the footsteps of Rama. (Divine Discourse, Apr 18, 1986.)
MAN’S PRIMARY DUTY IS TO UPHOLD THE HUMAN VALUES OF
TRUTH, RIGHTEOUSNESS, PEACE AND LOVE. - BABA.
இன்றைய தினம் ஸ்ரீராமரின் பிறந்த நாளாக எல்லா தேசங்களிலும் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீராமர், அவரது சிந்தனை, சொல், செயல் அதாவது, உடல், வாக்கு மற்றும் மனதை எப்போதும் பரிசுத்தமாகவும், முற்றிலும் களங்கமில்லாமலும் வைத்திருந்தார். உண்மையில், ஒருவர் ஸ்ரீராமரின் கதையை ஒரு ஆழ்ந்த உருவகப் படைப்பாக மதிக்க வேண்டும். அந்தக் கதையின் ஒவ்வொரு நிகழ்வும், கதாபாத்திரமும் கவனத்தை ஈர்த்து, மனதில் பதிந்து விடுகிறது, ஏனெனில், அந்த உருவகப் படைப்பு நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் தொடர்புடையது. உதாரணமாக தசரதரை எடுத்துக் கொள்ளுங்கள். ஐந்து கர்மேந்திரியங்களும், ஐந்து ஞானேந்திரியங்களும் கொண்ட மனித உடலை அவர் குறிக்கிறார். அவரது மூன்று மனைவிகளான கோசலை, சுமித்திரை மற்றும் கைகேயி ஆகியோர் முக்குணங்களான ஸத்வ, ரஜஸ் மற்றும் தமோ குணங்களாவர். அவரது நான்கு மைந்தர்களும் மனித வாழ்க்கையின் குறிக்கோள்களான தர்ம, அர்த்த, காம மற்றும் மோக்ஷத்தின் திருவுருமாவார்கள். ஸ்ரீராமர் தர்மத்தின் (ஒழுக்கம், சீலம், நன்னடத்தை) திருவுருவம். தர்மத்தை நிலையாகப் பற்றி ஒழுகுவதன் மூலமே மற்ற மூன்று குறிக்கோள்களையும் அடைய முடியும். எனவே தான், சகோதரர்களான லக்ஷ்மணன், பரதன் மற்றும் சத்ருக்னன் ஆகியோர் ஸ்ரீராமரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். (தெய்வீக அருளுரை ஏப்ரல் 18,1986)
மனிதப் பண்புகளான சத்யம், தர்மம், சாந்தி மற்றும் ப்ரேமையை நிலைநிறுத்துவதே மனிதனின் தலையாய கடமையாகும். - பாபா