azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 17 Apr 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 17 Apr 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Just as people squeeze juice out of the fibrous cane and drink only the sweetness, just as the bee sucks the honey in the flower regardless of its symmetry and colour, just as the moth flies toward the brightness of the flame, ignoring the heat and the inevitable catastrophe, so also the spiritual seeker (sadhaka) should yearn to imbibe the expression of the emotion of tenderness, pity, and compassion with which the Ramayana is saturated, paying no heed to other subjects. When a fruit is eaten, we throw away the skin, seeds, and fibre. It is in the very nature of Nature that fruits have these components! Nevertheless, no one eats them on the plea that one paid for them! So too, in this Rama fruit called Ramayana, the tales of demons, ogres and the like (rakshasas) form the rind; the wicked deeds of these evil people are the hard indigestible seeds; sensory and worldly descriptions and events are the not-too-tasty fibrous stuff - they are all sheaths for the juicy nourishment.(Rama Katha Rasavahini, Ch 1, “Rama – Prince & Principle”)
GOD WILL BE VERY NEAR TO ALL THOSE, WHOSE THOUGHTS, IDEALS AND DEEDS ARE
IN ACCORDANCE WITH RAMA'S. - BABA.
எவ்வாறு நார் நிறைந்த கரும்பைப் பிழிந்து, அதன் இனிமையை மட்டுமே மக்கள் அருந்துகிறார்களோ, எவ்வாறு ஒரு தேனீ, மலரின் அமைப்பு மற்றும் நிறம் எதுவாக இருந்தாலும், அதில் உள்ள தேனை மட்டுமே உறுஞ்சுகிறதோ, எவ்வாறு ஒரு அந்துப்பூச்சி வெப்பத்தையும் தவிர்க்க முடியாத பேரழிவையும் புறக்கணித்து சுடரின் பிரகாசத்தை நோக்கி பறக்கிறதோ, அவ்வாறே ஒரு ஆன்மிக சாதகனும், பிற விஷயங்களுக்கு செவிமடுக்காது, இராமாயணத்தில் தோய்ந்திருக்கும் மென்மையுணர்வு, இரக்கம் மற்றும் கருணை ஆகிய நற்குணங்களைப் பெறுவதற்கு விரும்ப வேண்டும். ஒரு பழத்தைச் சாப்பிட்ட பின், நாம் அதன் தோல், விதைகள் மற்றும் நாரை வீசி எறிந்து விடுகிறோம். இயற்கையில் பழங்கள் இவ்வனைத்து பகுதிகளையும் இயல்பாகவே கொண்டுள்ளன. இருந்தாலும், இப்பழங்களை காசு கொடுத்து வாங்கி இருக்கிறோம் என்பதற்காக எல்லாவற்றையும் சேர்த்து எவரும் உண்பதில்லை. அதைப் போலவே, இராமாயணம் எனும் இப்பழத்தில், அரக்கர்கள், பேய்கள் மற்றும் ராட்சதர்களைப் போன்றவர்களின் கதைகளே வெளித் தோல்; இத்தீயவர்களின் கொடூரமான செயல்களே செரிக்க முடியாத கடினமான விதைகள்; உணர்ச்சிகரமான மற்றும் உலகியலான வர்ணனைகளும் நிகழ்வுகளும் அவ்வளவு சுவை இல்லாத நார்கள் - இவை அனைத்துமே ஊட்டமளிக்கும் இனிமையான பழச்சாறுக்கு வெளி உறைகளே! (ராமகதா ரஸ வாஹினி - அத்தியாயம் 1)
எவரது சிந்தனைகள், இலட்சியங்கள் மற்றும் செயல்கள் ஸ்ரீராமரை ஒத்ததாக இருக்கின்றனவோ, அவர்கள் அனைவருக்கும் கடவுள் மிகவும் நெருக்கமானவராக இருப்பார். - பாபா