azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 11 Apr 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 11 Apr 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Mutual respect can be built on the faith that all are children of God and all are Divine. Then on that basis, there can be co-operation, and enthusiasm for work. Each will then do his best, knowing his duty and responsibility. The future of the country depends on the skill and sincerity of the youth. Therefore, the necessary enthusiasm and encouragement must be generated among the youth. All my hopes are based on students, the youth. They are very dear to Me. They are faultless! lt is the parent and the school that are at fault for all the waywardness and violence. They lead them into wrong directions. Instead of filling your heads with facts and figures, fill your heart with love and light. Have confidence in the vast powers of the Divine Self (Atma), which is your reality. Have faith in the Grace of God, which you can secure by prayer.(Divine Discourse, Jan 05, 1975.)
THE SELF (ATMA) HAS NO BIRTH, GROWTH, DECAY OR DEATH. IT IS CHANGELESS, IMMUTABLE AND ETERNAL. - BABA.
அனைவரும் இறைவனின் குழந்தைகள் மற்றும் அனைவரும் தெய்வீகமானவர்கள் என்ற நம்பிக்கையின் மீதே பரஸ்பர மரியாதையை நிலைநாட்ட முடியும். பிறகு, அதன் அடிப்படையில் பணி செய்ய ஒத்துழைப்பும், உற்சாகமும் இருக்க முடியும். தொடர்ந்து ஒவ்வொருவரும் தத்தம் கடமை மற்றும் பொறுப்பை உணர்ந்து அவர்களது முழுத்திறனுடன் பணியாற்றுவார்கள். நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் திறமை மற்றும் சிரத்தையைப் பொறுத்தே இருக்கிறது. எனவே, தேவையான உற்சாகம் மற்றும் ஊக்கத்தை இளைஞர்களிடையே உருவாக்க வேண்டும். எனது அனைத்து எதிர்பார்ப்புக்களும் மாணவர்கள், இளைஞர்கள் மீதே இருக்கிறது. அவர்கள் எனக்கு மிகவும் நேசமானவர்கள். அவர்கள் அப்பழுக்கற்றவர்கள்! அனைத்து வழிதவறுதலுக்கும் வன்முறைகளுக்கும், பள்ளி மற்றும் பெற்றோர்களே பொறுப்பாவார்கள். அவர்களே தவறான திசைகளில் இவர்களை இட்டுச் செல்கிறார்கள். உங்கள் மூளையை செய்திகள் மற்றும் புள்ளிவிவரங்களால் நிரப்புவதற்கு பதிலாக, உங்கள் இதயங்களை பிரேமை மற்றும் ஒளியால் நிரப்பிக் கொள்ளுங்கள். உங்கள் உண்மை நிலையான ஆத்மாவின் அளவற்ற ஆற்றல் மீது நம்பிக்கை வையுங்கள். பிரார்த்தனையின் மூலம் பெறக் கூடிய இறை அருளின் மீது நம்பிக்கை கொண்டு இருங்கள். (தெய்வீக அருளுரை, ஜனவரி 5, 1975)
ஆத்மாவிற்கு பிறப்போ, வளர்ச்சியோ, சிதைவோ, இறப்போ கிடையாது. அது மாற்றமற்றது; மாற்ற இயலாதது, சாஸ்வதமானது. – பாபா