azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 10 Apr 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 10 Apr 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Among the preliminary qualifications for yearning to know Brahman, the first is discrimination (viveka) between the transitory and the eternal — in other words, the discovery that the Atma alone is beyond time and that all objects perceivable by the senses are only transitory. As a result of prolonged investigation, one has to gain this unshakable conviction and be established in it. The second qualification is renunciation of the desire to enjoy, here and hereafter, the fruits of one’s actions. This is also known as nonattachment (vairagya). One must reason and realise the transitoriness of joy and grief, which are the pollutants that affect the mind. One will be convinced, then, that all things are caught in a flux; they are all momentary, they yield only grief. Vairagya does not involve giving up hearth and home, wife and children, and taking refuge in forests. It involves only the awareness of the world as transitory and, as a consequence of this awareness, discarding the feelings of “I” and “mine”.(Sutra Vahini, Ch 1)
WHEN THE FRUIT IS RIPE, IT WILL FALL OFF THE BRANCH OF ITS OWN ACCORD. SIMILARLY, WHEN VAIRAGYA SATURATES YOUR HEART, YOU LOSE CONTACT WITH THE WORLD AND SLIP INTO THE LAP OF THE LORD. - BABA.
பரப்ரம்மத்தை அறிந்துகொள்ள விழைவோருக்கான தகுதிகளில் முதன்மையான ஒன்று யாதெனில், நிலையற்றவை மற்றும் நிலையானவை என்று பகுத்தறியும் விவேகம் - அதாவது, ஆத்மா மட்டுமே காலத்திற்கு அப்பாற்பட்டது மற்றும் புலன்களால் உணரக்கூடிய அனைத்துப் பொருட்களும் தாற்காலிகமானவையே என்று அறிந்து கொள்வதே ஆகும். ஒரு நீண்ட ஆய்வின் விளைவாக இந்த அசைக்க முடியாத நம்பிக்கையை ஒருவர் பெற்று அதில் நிலைத்து நிற்க வேண்டும். ஒருவரது செயல்களின் பலன்களை இம்மையிலும், மறுமையிலும் அனுபவிக்க வேண்டும் எனும் ஆசையைத் துறப்பதே இரண்டாவது தகுதியாகும். இது பற்றின்மை (வைராக்கியம்) என்றும் கூறப்படுகிறது. மனதை பாதிக்கும் மாசுக்களான இன்பம் மற்றும் துன்பத்தின் நிலையற்ற தன்மையை ஒருவர் ஆராய்ந்து, உணர வேண்டும். பிறகு, அனைத்துப் பொருட்களும் ஒரு சுழலில் சிக்கி உள்ளன; அவை அனைத்தும் தாற்காலிகமானவை; துக்கத்தை மட்டுமே அளிப்பவை என்பதை ஒருவர் தீர்மானமாகப் புரிந்துகொள்ள முடியும். வைராக்கியம் என்றால், வீடு, வாசல், மனைவி, மக்கள் என்று அனைவரையும் துறந்து விட்டு, காடுகளில் அடைக்கலம் புகுவது என்று பொருளல்ல. வைராக்கியம் என்பது, உலகம் நிலையற்றது என்ற விழிப்புணர்வைப் பெற்று, அதன் விளைவாக "நான்", "எனது" என்ற உணர்வுகளை உதறித் தள்ளுவதாகும். (சூத்ர வாஹினி, அத்தியாயம்-1)
பழம் பழுத்தவுடன் கிளையிலிருந்து தானாகவே விழுந்து விடும். அதைப் போலவே, உங்கள் இதயம் வைராக்கியத்தால் நிறைந்த உடன், உங்கள் உலகப்பற்று நீங்கி, இறைவனது மடியில் தவழ்வீர்கள் - பாபா