azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 07 Apr 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 07 Apr 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Consider what happens when a person sees the dry stump of a tree at night: they are afraid it is a ghost or a bizarre human being. It is neither, though it is perceived as either. The reason for this misperception is “darkness”. Darkness imposes on something another thing that is not there. In the same manner, the darkness that is spread through false perception (maya) veils and renders unnoticeable the Primal Cause, Brahman, and imposes the cosmos on It, as a perceptible reality. This deceptive vision is corrected by the awakened consciousness and transmuted into the vision of universal love (prema). The cosmos of which the Earth is a part and with which we are embroiled has Brahman Itself as its basic cause, just as the stump is the basic cause of the ghost. (Sutra Vahini, Ch 2)
EARN THE SWORD OF WISDOM (JNANA) TO CUT ASUNDER THE VEIL OF MAYA. - BABA
இரவில் ஒரு காய்ந்த மரக்கம்பத்தை ஒருவர் பார்க்கும்போது என்ன ஆகிறது என்று யோசித்துப் பாருங்கள்; அவர் அது ஒரு பேயோ அல்லது பிசாசோ என்று எண்ணி பயப்படுகிறார். அது இவற்றில் ஏதோ ஒன்று எனக் கருதப்பட்டாலும், அது இரண்டுமே அல்ல. இந்த தவறான கருத்திற்குக் காரணம் "இருள்". இந்த இருட்டானது, ஒரு பொருளின் மீது, இல்லாத ஏதோ ஒரு பொருளை சுமத்தி விடுகிறது. இதே விதத்தில், தவறான புரிதலால் (மாயை) ஏற்பட்ட இருள், ஆதிகாரணமான பரப்ரம்மத்தைக் காண முடியாமல் மூடி மறைத்து, இந்த அகிலம் தான் கண்கூடாகத் தெரியும் ஒரு உண்மை என்பது போல ஒரு நிலையை உருவாக்கிவிடுகிறது. தட்டி எழுப்பப்பட்ட உள்ளுணர்வால் இந்தத் தவறான பார்வை திருத்தப் பட்டு, பிரபஞ்சமயமான ப்ரேம திருஷ்டியாக மாற்றப்படுகிறது. எவ்வாறு பேய்க்கு அடிப்படைக் காரணம் மரக்கம்பமோ, அதே போல, நாம் சிக்கித் தவிக்கும் இந்த பூமியை ஒரு பகுதியாகக் கொண்ட இந்த பிரபஞ்சமும், பரப்ரம்மத்தையே அடிப்படை காரணமாக கொண்டிருக்கிறது . (சூத்ர வாஹினி அத்தியாயம் 2)
ஞானம் எனும் வாள் கொண்டு மாயை எனும் திரையைக் கிழித்து எறியுங்கள். - பாபா