azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 04 Apr 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 04 Apr 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

When Jesus was being crucified, he heard an ethereal voice, “All are one, my dear son, be alike to everyone”. When Mother Mary was shedding tears, Jesus told her, “Death is the dress of life.” Death is like changing of a dress. Do you find anybody wearing the same dress every day? Just as you change your dress every day, you change your body from birth to birth. The body has death, but not the life principle - the Spirit is immortal and non-dual! “To realise the non-dualistic nature of the Spirit was true wisdom”, said Jesus! The Romans addressed Jesus as ‘persona’ meaning "one of sacredness". The English word “person” has been derived from this. It means that there is Divinity in everyone. That is why I address you as embodiments of Divinity. I and you are one. There is Divine Spirit in everybody. The very self is called “persona”. There is no life principle without Divinity! (Divine Discourse, Dec 25, 2001.)
THE SELF (ATMA) HAS NO BIRTH, GROWTH, DECAY OR DEATH. IT IS CHANGELESS, IMMUTABLE AND ETERNAL. - BABA.
ஏசு கிருஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது, "என் அருமை மகனே! அனைவரும் ஒன்றே, அனைவரிடமும் ஒன்று போல் நடந்து கொள்" என்ற ஒரு அசரீரி வாக்கைக் கேட்டார். அன்னை மேரி கண்ணீர் சிந்தியபோது, ஏசு அவரிடம், "மரணம் வாழ்க்கையின் உடை போன்றது" என்றார். மரணம் என்பது, ஒரு உடையை மாற்றிக் கொள்வது போன்றதே. ஒவ்வொரு நாளும் ஒரே உடையை ஒருவர் அணிந்து கொள்வதை பார்த்திருக்கிறீர்களா? எவ்வாறு ஒவ்வொரு நாளும் உடையை நீங்கள் மாற்றிக் கொள்கிறீர்களோ, அவ்வாறே, நீங்கள் பிறப்பிற்குப் பிறப்பு உங்களுடைய உடலை மாற்றிக் கொள்கிறீர்கள். இறப்பு உடலுக்குத் தானே அன்றி, ஆத்மாவிற்கு அல்ல - ஆத்மா இறப்பற்றதும், இருமையற்றதும் ஆகும்! "ஆத்மாவின் இருமையற்ற இயல்பை உணர்வதே உண்மையான ஞானம்" என்றார் ஏசு கிருஸ்து! ரோமானியர்கள், ஏசு கிருஸ்துவை, "பெர்சோனா" (Persona) அதாவது "புனிதமானவர்" என்று அழைத்தார்கள். ஆங்கில வார்த்தையான ‘பெர்சன்’ (Person) என்பது இதிலிருந்து பெறப்பட்ட வார்த்தையே. இதன் பொருள், ஒவ்வொருவர் உள்ளும் தெய்வீகம் இருக்கிறது என்பதே. அதனால்தான் நான் உங்களைத் தெய்வீகத்தின் திருவுருவங்களே என்று அழைக்கிறேன். நானும் நீங்களும் ஒன்றே. ஒவ்வொருவர் உள்ளும் தெய்வீக ஆத்மா இருக்கிறது. அந்த ஆத்மாவைத் தான் "பெர்சோனா" என்று அழைக்கப்படுகிறது. தெய்வீகம் இல்லாமல் ஜீவதத்துவம் இல்லை! (தெய்வீக அருளுரை, டிசம்பர் 25, 2001)
ஆத்மாவிற்கு பிறப்போ, வளர்ச்சியோ, சிதைவோ, இறப்போ கிடையாது. அது மாற்றமற்றது; மாற்ற இயலாதது, சாஸ்வதமானது. - பாபா