azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 03 Apr 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 03 Apr 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

The Divine is the base — and is also the superstructure. The beads are many, but the interconnecting and integrating string of the rosary is one. So also for the entire world of living beings; God, the permanent, omnipresent, Supreme Divine Consciousness (Parabrahman), is the base. “I am God (soham)”, “He is I”, “I am that” - all these axioms indicate that even those that differentiate themselves under names and forms are in fact God Himself. The bubble born of water floats in it and bursts to become one with it. All the visible objective worlds are like the bubbles emanating from the vast ocean of Divinity, Brahman. They are on the water and are sustained by water. How else can they arise and exist? Finally, they merge and disappear in water itself. Water is one; bubbles are plentiful. Water is real; bubbles are appearances. Water is the basis; bubbles are delusive forms of the same imposed on it. (Sutra Vahini, Ch 2)
MAKE AN EFFORT TO UNDERSTAND THE RELATIONSHIP BETWEEN
THE SUPPORT (ADHARA) AND THE SUPPORTED OBJECT (ADHEYA). -BABA.
தெய்வீகம் தான் அடித்தளம்; அதுவே மேல் உள்ள கட்டமைப்பும் கூட. மணிகள் பல, ஆனால் அவற்றை ஜபமாலையாகக் கோர்த்து, இணைக்கும் சரம் ஒன்று தான். அதைப் போன்றே ஜீவராசிகளின் இவ்வுலகம் அனைத்திற்கும், நிரந்தரமான, அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த பரப்பிரம்மமான இறைவனே அடித்தளமாவான். நாம, ரூபங்களால் தங்களைப் பிரித்துக் காட்டுபவர்களும் கூட உண்மையில் இறைவனே என்பதை, "நானே இறைவன் (ஸோஹம்)", "அவன் நானே", "அது நானே" என்ற மஹாவாக்யங்கள் அனைத்தும் சுட்டிக் காட்டுகின்றன. நீரில் தோன்றிய நீர்க்குமிழ் அதிலேயே மிதந்து, வெடித்துப் பின் அதனுடனேயே ஒன்றாகி விடுகிறது. கண்களுக்குப் புலப்படும் பொருட்களாலான உலகங்கள் அனைத்தும் பரந்து விரிந்த, பரப்ரம்மன் என்ற தெய்வீக சாகரத்திலிருந்து தோன்றிய நீர்குமிழ்கள் போன்றவையே. அவை நீரிலேயே இருக்கின்றன, நீரினாலேயே போஷிக்கப்படுகின்றன. வேறு எப்படி அவை தோன்றி நிலைத்து இருக்க முடியும்? இறுதியாக, அவை நீரிலேயே இரண்டறக் கலந்து மறைந்து விடுகின்றன. தண்ணீர் ஒன்றுதான், நீர்க்குமிழிகளோ ஏராளமானவை. நீரே உண்மை; நீர்க்குமிழ்கள் தோற்றங்களே. நீரே ஆதாரம்; அதன் மீது சுமத்தப்பட்ட மாய ரூபங்களே நீர்க்குமிழ்கள். (சூத்ர வாஹினி, அத்தியாயம் 2)
ஆதாரத்திற்கும் (ஆதாரம்), ஆதாரத்தைக் கொண்ட பொருளுக்கும் (ஆதேயம்) இடையே உள்ள சம்பந்தத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் - பாபா