azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 24 Mar 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 24 Mar 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Sunlight enables man to perform various actions. Yet, the Sun remains unaffected by what man does. It is just a witness. Likewise, God is the eternal witness. He is unaffected by what happens around. Clouds, which owe their existence to the sun, cover the Sun itself! But that does not in any way diminish the brilliance of the Sun. Similarly, God does not stand to lose anything if man, who owes his existence to God, derides Him. Man will certainly reap the consequences of his actions; God is not affected by them. Just as the clouds originate from the Sun, likewise, mind (manas), intellect (buddhi) and subconscious mind (chitta) are formed out of the Divine Self (Atma). Your mind is responsible for all suffering, and even rebirth. So, your mind has to be diverted toward God in order to escape from the cycle of birth and death! (Divine Discourse, Sep 13, 1999.)
TO ENJOY ENDURING HAPPINESS, YOU MUST FILL YOUR MIND WITH PURE THOUGHTS
AND ENTERTAIN FINE FEELINGS IN YOUR HEART. - BABA.
சூரிய ஒளியினால் மனிதன் பல வேலைகளைச் செய்ய முடிகிறது. இருந்தாலும், மனிதன் என்ன செய்கிறானோ, அதனால் சூரியன் பாதிக்கப்படாமலேயே இருக்கிறது. அது வெறும் ஒரு சாட்சியே. அதைப் போலவே இறைவன் நிரந்தர சாட்சிபூதமானவன். சுற்றி நடப்பவைகளால் அவன் பாதிக்கப்படுவதில்லை. மேகங்கள், அவை தாம் உருவாவதற்கு காரணமான சூரியனையே மறைத்து விடுகின்றன! ஆனால், அது எந்த விதத்திலும் சூரியனது பிரகாசத்தை மங்கச் செய்வதில்லை. அதைப் போலவே, தான் வாழ்வதற்குக் காரணமான இறைவனையே மனிதன் தூற்றினால், இறைவனுக்கு அதனால் எந்த இழப்பும் இல்லை. தனது செயல்களின் விளைவுகளை மனிதன் கட்டாயம் அனுபவிக்கத் தான் வேண்டும்; இறைவன் அவற்றால் பாதிக்கப்படுவதில்லை. எவ்வாறு மேகங்கள் சூரியனிடமிருந்து உருவாகின்றனவோ, அவ்வாறே மனம் (மனஸ்), அறிவு (புத்தி) மற்றும் உள்மனம் (சித்தம்) ஆகியவை தெய்வீக ஆத்மாவிலிருந்தே (ஆத்மா) உருவாகின்றன. அனைத்து துன்பங்களுக்கும், ஏன் மறுபிறவிக்கும் கூட, உங்கள் மனமே பொறுப்பாகும். எனவே, பிறப்பு மற்றும் இறப்பு என்ற சுழற்சியிலிருந்து மீள்வதற்கு, உங்கள் மனதை இறைவனை நோக்கித் திருப்பியே ஆக வேண்டும் (தெய்வீக அருளுரை செப்டம்பர் 13,1999)
நிரந்தர ஆனந்தத்தை அனுபவிப்பதற்கு, நீங்கள் உங்கள் மனதை பரிசுத்தமான சிந்தனைகளால் நிரப்பிக் கொண்டு, சீரிய உணர்வுகளுக்கு இதயத்தில் இடமளிக்க வேண்டும் - பாபா