azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 23 Mar 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 23 Mar 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

One can subdue the mind through concentration. The process can be practised in either of two directions - A-rupa or Sa-rupa. A-rupa means 'unbound' by form. One feels that he is not the doer or enjoyer; he is only an agent of God, an instrument, and therefore one is unaffected, well or ill, when the act results in good or bad! One has no identity with the rupa (form or body). Sa-rupa meditation gets lost in dualities of pleasure and pain, profit and loss, for it considers the name and form, the body and its activities as valid. Similarly, man has the choice of two paths - the Pravritti Marga (the path of involvement) or the Nivritti Marga (the path of non-involvement). When involved, man is confronted with the six internal foes - lust, anger, greed, attachment, pride and hatred. When non-involved, man is helped by six internal friends - sense control, mind control, fortitude, contentment, faith and equanimity. (Divine Discourse, May 6, 1983)
I BLESS THAT YOU MAY GET THE WILL TO PERSIST IN YOUR SADHANA, TILL SUCCESS IS WON. - BABA
ஒருவர் தியானத்தின் மூலம் மனதை அடக்க முடியும். அ-ரூப அல்லது ஸ-ரூப ஆகிய இரு வழிகளில் ஏதேனும் ஒரு வழியில் இந்த முறையை பயிற்சி செய்யலாம். அ-ரூப என்றால் ரூபத்தால் பிணைக்கப்படாதது என்று பொருள். ஒருவர், தான் செய்பவரோ அல்லது அனுபவிப்பவரோ இல்லை என்றும், அவர் இறைவனின் வெறும் ஒரு முகவர், ஒரு கருவி மட்டுமே என்றும் கருதுகிறார்; எனவே, நலமாக இருந்தாலோ அல்லது நோய்வாய்ப்பட்டு இருந்தாலோ, செயல் நல்லவையாக முடிந்தாலோ அல்லது தீயவையாக முடிந்தாலோ அவர் பாதிக்கப்படுவதில்லை. ஒருவர் எந்த ரூபத்துடனும் (உருவம் அல்லது உடல்) தன்னை இனம் கண்டு கொள்வதில்லை. நாமம் மற்றும் ரூபம், உடல் மற்றும் அதன் செயல்பாடுகளை ஏற்புடையதாக ஒருவர் கருதுவதால், சுகம் மற்றும் துக்கம், லாபம் மற்றும் நஷ்டம் போன்ற இருமைகளில் ஸ-ரூப தியானம் கலைந்து போய் விடுகிறது. அதைப் போலவே, மனிதன் தேர்ந்தெடுக்க இரண்டு பாதைகள் உள்ளன - ப்ரவ்ருத்தி மார்க்கம் (பற்றுதலின் பாதை) அல்லது நிவ்ருத்தி மார்க்கம் (பற்றின்மையின் பாதை). பற்றுதலுடன் இருக்கும் போது, மனிதன் ஆறு உள்ளார்ந்த விரோதிகளான காமம், க்ரோதம், லோபம், மோகம், மதம், மாத்சர்யம் ஆகியவற்றை எதிர் கொள்ள வேண்டி உள்ளது. பற்றின்றி இருக்கும் போது, மனிதன் ஆறு விதமான உள்ளார்ந்த நண்பர்களான புலனடக்கம், மனக்கட்டுப்பாடு, சகிப்புத்தன்மை, திருப்தி, தெய்வ நம்பிக்கை மற்றும் சமச்சீரான மனப்பாங்கு ஆகியவற்றால் உதவப்படுகிறான். (தெய்வீக அருளுரை மே 6, 1983)
வெற்றி கிட்டும் வரை உங்களது ஆன்மிக சாதனையில் தொடர்ந்து இருப்பதற்கான மனத்திண்மை உங்களுக்கு கிடைக்கட்டும் என நான் ஆசீர்வதிக்கிறேன் - பாபா