azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 21 Mar 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 21 Mar 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Shun bad company. Seek good company. Only then will your life be redeemed. Very often I remind the students that by joining bad company, you become slaves. You should be masters, not slaves. You all know what happened to Kaikeyi on listening to the words of Manthara. No one loved Rama more than Kaikeyi. But when her intelligence was clouded, she believed the words of the wicked Manthara. To one with perverted intellect, truth appears as untruth and vice versa. Due to the effect of bad company, the mind gets polluted. So, right from the tender age, “Tyaja durjana samsargam, bhaja sadhu samagamam, kuru punyamahoratram, smara nithyamanithyatham” (run away from bad company, join good company, undertake righteous actions day and night, and enquire into that which is permanent and that which is ephemeral). One should not develop unnecessary contacts. Your interaction with others should be limited to basic courtesies like, “Hello, how are you?”(Divine Discourse, Sep 13, 1999).
FILL YOUR MIND WITH NOBLE THOUGHTS AND OFFER THAT GARDEN OF FLOWERS TO GOD! - BABA.
தீயவர்களின் நட்பு வட்டத்தைத் தவிர்த்து விடுங்கள்; நல்லோரின் நட்பு வட்டத்தை நாடுங்கள். அதற்குப் பிறகு மட்டுமே, உங்கள் வாழ்க்கை மீட்கப்படும். தீயவர்களின் நட்பு வட்டத்தில் சேருவதன் மூலம், நீங்கள் அடிமைகள் ஆகி விடுகிறீர்கள் என்று மாணவர்களுக்கு நான் அடிக்கடி நினைவூட்டுகிறேன். நீங்கள் அடிமைகளாக இல்லாது எஜமானர்களாக இருக்க வேண்டும். மந்தரையின் வார்த்தைகளைக் கேட்ட கைகேயிக்கு என்ன நடந்தது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். கைகேயியை விட ஸ்ரீ ராமரை அதிகம் நேசித்தவர் எவரும் இல்லை. ஆனால், அவளது புத்தி மாசடைந்த போது, அவள் பொல்லாத மந்தரையின் வார்த்தைகளை நம்பினாள். வக்கிரமான புத்தி கொண்ட ஒருவருக்கு, உண்மை பொய்யாகவும், பொய் உண்மையாகவும் தோன்றுகிறது. தீயவர்களின் நட்பு வட்டத்தால் மனம் மாசடைந்து விடுகிறது. எனவே, சிறு வயதிலிருந்தே, "த்யஜ துர்ஜன ஸம்ஸர்கம், பஜ ஸாது ஸமாகமம், குரு புண்யமஹோராத்ரம், ஸ்மர நித்யமநித்யதம்" (தீயவர்களின் நட்பு வட்டத்திலிருந்து ஓடிவிடுங்கள், நல்லோரின் நட்பு வட்டத்தில் சேர்ந்து விடுங்கள், இரவு பகலாக தார்மீகப் பணிகளை மேற்கொள்ளுங்கள், எது நிலையானது, எது நிலையற்றது என்பதை ஆராயுங்கள்). ஒருவர் தேவையற்ற சம்பந்தங்களை வளர்த்துக் கொள்ளக் கூடாது. மற்றவர்களுடனான உங்கள் உறவு, “ஹலோ, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?” போன்ற அடிப்படை உபசார வார்த்தைகளோடு நிறுத்திக் கொள்ளப்பட வேண்டும்.- தெய்வீக அருளுரை செப்டம்பர் 13,1999.
உங்கள் மனங்களை சீரிய சிந்தனைகளால் நிரப்பிக் கொண்டு, அந்தத் தோட்டத்தின் மலர்களை இறைவனுக்கு அர்ப்பணியுங்கள் - பாபா