azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 19 Mar 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 19 Mar 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

The body is bound to perish one day or another. The body may die, but not the mind. Such a mind must be controlled. That is true sadhana. You will not have any trouble if you offer your mind to God. The mind is very fickle; not steady even for a minute. So it should be ever engaged in work. Only then it can be brought under control. What work should you assign to the mind? The mind is like a mad monkey. Unless kept busy, it will go according to whims and fancies. The only way to keep a monkey busy is to make it go up and down a pole repeatedly! Let the mind be a watchman at the gate of your nostrils. Let it observe what is going in and coming out. ‘So’ is inhaled and ‘Ham’ is exhaled. ‘So’ symbolises good (Divinity) and ‘Ham’ stands for that which is bad (ego). Then, the mind will understand that Divinity must be taken in and the ego must be given up! (Divine Discourse, Sep 13, 1999.)
A PEACEFUL MIND IS THE ABODE OF LOVE. - BABA.
உடல் என்றேனும் ஒரு நாள் அழியத்தான் போகிறது. உடல் அழியலாம், ஆனால் மனம் அழிவதில்லை. இப்படிப்பட்ட ஒரு மனதைக் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும். அதுவே உண்மையான ஆன்மிக சாதனை. நீங்கள் உங்கள் மனதை இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டால், உங்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது. மனம் மிகவும் சஞ்சலமானது; அது ஒரு நிமிடம் கூட நிலையாக இருக்காது. எனவே, அது எப்போதும் பணியில் ஈடுபட்டு இருக்க வேண்டும். அதன் பிறகு மட்டுமே அதனைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். நீங்கள், மனதிற்கு எந்தப் பணியை ஒதுக்க வேண்டும்? மனம் ஒரு பித்துப் பிடித்த குரங்கைப் போன்றது. அதைச் சுறுசுறுப்பாக எதிலாவது ஈடுபடுத்தாமல் இருந்தால், அது தனது விருப்பப்படி திரிந்து கொண்டு இருக்கும். ஒரு குரங்கை சுறுசுறுப்பாக இருக்க வைப்பதற்கான ஒரே வழி, அதை ஒரு கம்பத்தில் மேலும், கீழும் திரும்பத் திரும்ப ஏறி இறங்க வைப்பது தான்! உங்கள் மனம் உங்கள் மூக்கு என்ற வாசலில் பாதுகாப்பாளனாக இருக்கட்டும். அது, எது உள்ளே போகிறது, எது வெளியே வருகிறது என்பதைக் கவனிக்கட்டும். "ஸோ" என்பது உள்மூச்சாகச் செல்கிறது, "ஹம்" என்பது வெளிமூச்சாக வருகிறது. "ஸோ" என்பது நல்லதைக் (தெய்வீகத்தை) குறிக்கிறது; "ஹம்" என்பது எது தீயதோ (அகந்தை) அதைக் குறிக்கிறது. தெய்வீகத்தை உள் வாங்கிக் கொள்ள வேண்டும், அகந்தையை விட்டு விட வேண்டும் என்பதை மனம் பின்னர் புரிந்து கொள்ளும்! - தெய்வீக அருளுரை செப்டம்பர் 13,1999.
ஒரு அமைதியான மனமே அன்பின் இருப்பிடம் ஆகும். - பாபா