azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 17 Mar 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 17 Mar 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Many devotees ask Me, “Swami, I want happiness.” Where is this happiness? Can you buy it in the market? Will any company supply you bliss? No! It is very much in you. You are not able to experience it since you do not have faith in yourself. You do not have love for God. Love is within you, but you are diverting it towards the world, not towards God. Worldly love is like passing clouds. Develop the love that is unwavering. It neither comes nor goes, it is in you always. Have unflinching faith in its existence. Question yourself, “Do I exist?” You get the reply, “Yes, I do exist.” That is the true faith. Here is a flower, a handkerchief, a tumbler. The word ‘is’ denotes true faith. Have faith in your existence, “I am.” That is true faith! You do not need to enquire into the nature of God or to search for Him. Have total faith in Him. (Divine Discourse, Sep 3, 1999)
FILL YOUR MIND WITH NOBLE THOUGHTS AND OFFER THAT GARDEN OF FLOWERS TO GOD! - BABA
பல பக்தர்கள் என்னிடம், "சுவாமி! எனக்கு சந்தோஷம் வேண்டும்" என்று கேட்கிறார்கள். இந்த சந்தோஷம் எங்கு இருக்கிறது? இதைக் கடையில் நீங்கள் வாங்க முடியுமா? உங்களுக்கு ஆனந்தத்தை எந்த நிறுவனமானது அளிக்க முடியுமா? இல்லை! இது உங்களுக்குள்ளேயே இருக்கிறது. உங்களுக்கு உங்கள் மீதே நம்பிக்கை இல்லாததால், உங்களால் இதை உணர முடியவில்லை. உங்களுக்கு இறைவன் பால் ப்ரேமை இல்லை. ப்ரேமை உங்களுக்குள்ளேயே இருக்கிறது, ஆனால் நீங்கள் அதை இறைவன் பால் அல்லாது, உலகத்தை நோக்கித் திருப்பி விட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். உலகியலான ப்ரேமை கலையும் மேகங்களைப் போன்றதாகும். ஊசலாடாத ப்ரேமையை அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள். அது வருவதும் இல்லை, போவதும் இல்லை; அது உங்களுக்குள்ளேயே எப்போதும் இருக்கிறது. அது இருப்பதைப் பற்றி அசையாத நம்பிக்கை கொண்டு இருங்கள். உங்களை நீங்களே, "நான் இருக்கிறேனா?" என்று கேட்டுக் கொள்ளுங்கள். " ஆமாம், நான் இருக்கத்தான் செய்கிறேன்" என்ற பதிலை நீங்கள் பெறுவீர்கள். அதுவே உண்மையான நம்பிக்கை. இங்கு ஒரு மலர் இருக்கிறது, ஒரு கைக்குட்டைஇருக்கிறது, ஒரு டம்ளர் இருக்கிறது. "இருக்கிறது" என்ற வார்த்தை உண்மையான நம்பிக்கையைக் குறிக்கிறது. "நான் இருக்கிறேன்", என்ற உங்களது இருப்பின் மீது நம்பிக்கை வையுங்கள். அதுவே உண்மையான நம்பிக்கை! நீங்கள் இறைவைனது தன்மையைப் பற்றி ஆராயவோ அல்லது அவனைத் தேடவோ தேவையில்லை. அவன் மீது பரிபூரண நம்பிக்கை வையுங்கள்.
உங்கள் மனங்களை சீரிய சிந்தனைகளால் நிரப்பிக் கொண்டு,
அந்தத் தோட்டத்தின் மலர்களை இறைவனுக்கு அர்ப்பணியுங்கள் - பாபா