azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 16 Mar 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 16 Mar 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

There are innumerable instances of God coming to the rescue of His devotees in times of need. SantKabir was a weaver by profession. One day he fell seriously ill and was unable to attend to his duties. The all-merciful Lord, in the form of Kabir, wove yarn and thus came to his rescue. Similarly, God came in the form of a potter and helped Gora Kumbhar when he was in distress by making pots Himself. Sakkubai, an ardent devotee of Lord Panduranga, continuously chanted the Lord’s name. One day, she could not perform her daily chores since she was running high temperature. Even under these circumstances, her husband and mother-in-law would not allow her to take rest. At this juncture, Lord Panduranga assumed the form of Sakkubai and performed all her duties. It is indeed difficult to understand how, when and where God would come to the rescue of His devotees. Absolute faith is essential for God to manifest! (Divine Discourse, Sep 3, 1999)
MYSTERIOUS ARE THE WAYS OF THE DIVINE. IT IS DIFFICULT TO COMPREHEND
HOW THE DIVINE GRACE WORKS. - BABA
தேவைப்படும் நேரங்களில் அவனது பக்தர்களைக் காப்பதற்காக இறைவன் வந்த எண்ணற்ற சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. சந்த் கபீர் ஒரு நெசவுத் தொழிலாளியாக இருந்தார். ஒரு நாள் அவர் மிகவும் நோய் வாய்ப்பட்டு, அவரது கடமைகளைச் செய்ய முடியாமல் இருந்தார். கருணாமூர்த்தியான இறைவன், கபீரின் உருவில் வந்து, நூலை நெய்து அவரைக் காப்பாற்றினார். அதைப் போலவே, அவர் துன்பத்தில் இருந்த போது, இறைவன் குயவன் உருவில் வந்து, தானே பானைகளைச் செய்து, கோரா கும்பருக்கு உதவினார். பகவான் பாண்டுரங்கனின் தீவிர பக்தையான சக்குபாய், இறைவனது திருநாமத்தை இடையறாது உச்சரித்துக் கொண்டே இருப்பார். ஒரு நாள், அவளுக்கு அதிகமான காய்ச்சல் இருந்ததால், அவளால் அன்றாட வேலைகளைச் செய்ய முடியவில்லை. இந்த சமயங்களில் கூட, அவரது கணவரும், மாமியாரும் அவளை ஓய்வு எடுத்துக் கொள்ள அனுமதிக்கவில்லை. அந்தத் தருணத்தில் பகவான் பாண்டுரங்கன் சக்குபாயின் உருவத்தை ஏற்று வந்து, அவளது வேலைகளை எல்லாம் செய்தான். இறைவன், எவ்வாறு, எப்போது, எங்கு வந்து தனது பக்தர்களைக் காப்பாற்றுவான் என்பதைப் புரிந்து கொள்வது கடினமே. பரிபூரண நம்பிக்கையே, இறைவன் தோன்றுவதற்கு அத்தியாவசியமாகும்!
தெய்வீக வழிகள் மர்மமானவை. தெய்வீக அருள் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினம் - பாபா